Monday, January 10, 2011

இன்றும் ஒரு தகவல்

காமசூத்திரம் போன்ற புத்தகங்களை ஆபாச புத்தகம் என்று கருதி அட்டை போட்டு, மறைத்து வைத்து ரகசியமாக படிக்கும் பழக்கம் இப்போதும் இருக்கிறது. நாகரீக வளர்ச்சி பெற்ற இந்த காலத்திலேயே இப்படி என்றால் நிறைய இறை நம்பிக்கையும், ஒழுக்கமும் போதிக்கப்பட்ட வேத காலங்களில் காமத்தை எப்படி பார்த்தார்கள்?

வேதங்கள் காமத்தை மதித்தான. வாழ்க்கை ரகசியங்களை அக்குவேறு, ஆணிவேராக புட்டுவைக்கும் வேதங்கள் எல்லாம் காமத்துக்கு மரியாதை கொடுத்தன. வேதங்களில் முதன்மையானது என்று சொல்லப்படுகிற ரிக் வேதத்தில் 10-வது மண்டலத்தில் 129-வது பகுதியில் வரும் நான்காவது மந்திரம் இப்படி சொல்கிறது. 'காமம்தான் உலகில் முதலில் பிறந்தது. காமம்தான் மனதுக்கு முதல் வித்து. அந்த மனதை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலமாக இருத்தலுக்கும், இல்லாமல் இருத்தலுக்கும், இடையே இணைப்பை ஏற்படுத்தினார்' என்கிறது அந்த மந்திரம்.

அதர்வன வேதமும் 'உலகில் முதலில் பிறந்தது காமம்தான்' என்று அடித்துச்சொல்கிறது. ஒன்பதாவது காண்டம் இரண்டாவது சூக்தம் 19-வது, 21-வது மந்திரங்கள் இதைச்சொல்கின்றன. 'உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்தி வாய்ந்தது; கடவுளே, முன்னோர்களோ, மனிதர்களோ அதற்கு நிகர் கிடையாது; ஓ காமமே! எல்லையற்ற பேரளவு கொண்டவன் நீ... எல்லா உயிர்களிலும் நீ நிறைந்திருக்கிறாய்... சூரியன், சந்திரன், காற்று, அக்னி ஆகிய எல்லா கடவுள்களையும் விட நீ மேலானவன்; எப்போதுமே நீ முதன்மையானவன்' என்று காமத்தை வணங்குகின்றன மந்திரங்கள். காமசூத்திரத்தில் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இன்றைக்கும் பொருந்தும். தேவதாசிகளுக்கு அவர் சொன்ன பல அறிவுரைகள் எல்லோருக்குமே பயன்படும் விதத்தில் இருக்கின்றன. காலத்தை கடந்து நிற்பதுதான் இதன் வெற்றி.

சகல சாஸ்திரங்களையும் படைத்த மேற்கத்திய நாடுகளிலும் கூட காமசூத்திரம் போன்ற துல்லியமாக ஒரு செக்ஸ் நூல் 18-ம் நூற்றாண்டு வரை கூட எழுதப்படவில்லை. சூத்திரம் என்றால் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக, தெளிவாக சொல்வது என்று அர்த்தம். வாத்சாயனர் இதை சரியாக செய்திருக்கிறார். அதனால்தான் உலக செக்ஸ் நிபுணர்கள் இந்தியர்களை இன்றைக்கும் பொறுமையோடு பார்கிறார்கள்.

செக்ஸில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கும் அவர் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார். எந்த மாதிரியான உறவுகள் சரி? எந்த மாதிரியான செக்ஸ் தவறு என்று எந்த இடத்திலும் நீதிபதி போல் நின்று தீர்ப்பு அளிக்கவில்லை.

இப்படி எல்லாம் நடக்கிறது? உலகில் இதுபோன்ற விஷயங்களும் இருக்கின்றன என்று ஒரு பயணக்கட்டுரை எழுதுவதுபோல் எழுதிக் கொண்டு போகிறார். எது சரி? எது தவறு என்ற தீர்மானத்தை, படிக்கும் வாசகர்களின் பார்வைக்கே விட்டு விட்கிறார்.

இத்தனை விஷயங்களையும் சொன்ன வாத்சாயனர் பெண் வாசனையே அறியாத பிரம்மச்சாரி என்று பலர் சொல்கிறார்கள். இல்லை. அவர் பிரம்மச்சாரியாக இருந்தால் எப்படி உடலுறவின் உணர்வுகளை துல்லியமாக விவரித்து எழுத முடியும். அனுபவிக்காமல் அவரால் எழுதியிருக்க முடியாது என்கிறார்கள் சிலர். அவர் அனுபவித்து எழுதினாரா அல்லது அந்தக்கால ரிஷிகள் போல ஞாப்பார்வையில் ஞானம் வரப்பெற்று எழுதினாரா என்பது இன்னமும் விடை கிடைக்காத கேள்விதான்.                       

1 comment:

அப்பாதுரை said...

வேத மேற்கோள் சுவை.
வாத்சாயனர் impotent என்றும் படித்திருக்கிறேன். தன் ஆராய்ச்சிக்காக தன்னுடைய சீடர்கள் (?) இருவரை மங்கைகளோடு பழகவிட்டு நேரில் பார்த்ததை எழுதினார் என்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அனுபவமில்லாமல் இவற்றை விவரித்து எழுதுவது இயலாது; சில காமசூத்திர முறைகள் படிக்கவே சிரமமாக இருக்கும் பொழுது :). எனக்கென்னவோ மிஸ்டர் வா. இந்த காமப் பிரியர் என்றும் காம ரசிகர் என்றும் தோன்றுகிறது. காமம் தொட்ட வியாதிகள் பற்றியும் அவர் அறிந்திருந்ததால், ஒரு வேளை மற்றவர்களை வைத்து பழகச்சொல்லி அனுபவத்தை புத்தகமாக எழுதியிருக்கலாம். more likely, தானும் தன் துணையும் model போல் நடந்து காம முறைகளைச் செய்து காட்ட, அவருடைய சீடர்கள் பின்பற்றி பகிர்ந்த அனுபவங்களைப் பொதுவில் வைத்த எழுத்தாளர் என்று நினைக்கிறேன்.