Saturday, December 4, 2010

இன்றும் ஒரு தகவல்

ரசிகர்கள் பலவிதம்

ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் வரை தான் எந்த நடிகருக்கும் வரவேற்பு இருக்கும். ரசிகர்களின் ரசனை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

என்.டி.ராமாராவ் உயிருடன் இருந்தவரை அவரது ரசிகர்கள் திருப்பதியில் மொட்டை போட்டுவிட்டு நேராக சென்னை வந்து என்.டிஆர். வீட்டை பார்த்துவிட்டுத்தான் போவார்கள். தப்பித் தவறி என்.டி.ஆர். பால்கனியில் நின்றிருந்தால் போதும். அவ்வளவுதான் கேட்டுக்கு வெளியே ரோட்டில் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரிப்பார்கள். 'தேவுடு, தேவுடு' என்று பரவசப்படுவார்கள்.

சரி, ஹாலிவுட்டில் எப்படி ரசிகர்கள் இருக்கிறார்கள்? நடிகர்கள் அதிகம் இருக்கும் பகுதியான லாஸ் ஏஞ்சல்ஸ், பெவர்லிஹில்ஸ் பகுதியில் இன்றைக்கும் நடிகர்களின் பிரம்மாண்டமான படங்களை விற்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் நடிகர், நடிகைகள் வீட்டு வாசலை பார்த்ததும் வணங்குகிறார்கள். ஏதாவது ஒரு நடிகர் பொழுது போகாமல் புல்வெட்டிக் கொண்டோ தோட்டத்தில் உலாத்திக் கொண்டோ இருந்தால் ரசிகர்கள் அவரை மொய்த்து போட்டோவும் ஆட்டோகிராபுமாக தொந்தரவு கொடுப்பார்கள்.

ஆனால் கடைவீதிகளிலோ ஓட்டல்களிலோ எதிர்படும் நடிகர்களை ரசிகர்கள் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். ஒரு ஹலோ, சின்ன புன்னகை, அதிகபட்சமாக ஆட்டோகிராப்போடு முடித்துகொள்வார்கள். நடிகர் எடிமர்பி - ஓட்டலில் தன்னிடம் வலிய வந்து பேசிய ஒரு வெயிட்டரை வேளையில் இருந்தே தூக்க வைத்தார்.
வட கலிபோர்னியாவில் உள்ள கார்மெல் என்கிற ஊரில்தான் நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் குடியிருக்கிறார். அழகான கடற்கரை, சிறிய ஊர், அவர் ஊரில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த ஊரில் கால் வைத்ததுமே மெய்சிளிர்த்துப்போகிறார்கள், ரசிகர்கள். அவருக்கு சொந்தமான ஹாக்ஸ் பரெத் இன் என்ற ஒயின்ஷாப்பில் ஒரு பெக் ரம் குடித்தால் ஏதோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டையே பார்த்தது போல் சந்தோஷமடைவார்கள். இந்த பாறை அவர் விற்று 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும் ரசிகர்களுக்கு அது இன்னமும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பார் தான்.

மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜெனிபர் லோபஸ் போன்றவர்களுக்கு வெறித்தனமாக ரசிகர்கள் உண்டு. மடோனா மொட்டை போட்டால் ரசிகர்களும் மொட்டை அடிக்கிறார்கள். தொப்புளில் வளையம் போட்டால் இளம் பெண்களின் தொப்புளிலும் வளையம் தொங்குகிறது.

ஆனால், தமிழ் ரசிகர்கள் போல் ஆத்மார்த்தமான ரசிகர்கள் அங்கு கிடையாது. கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், வெறுங்கையில் சூடம் ஏற்றுவது எதுவும் அங்கு கிடையாது. நடிகர்களை பார்த்து பரவசப்படுவது, அவர்கள் ஸ்டைலை பின் பற்றுவதொடு சரி.

நம்மூரை போல விடிய விடிய போஸ்டர் ஓட்டுவதும், கோவில் கோவிலாக சென்று படம் ஓட வேண்டும் என பூஜை செய்வது அங்கு கிடையாது. நடிகர்களுக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இங்கு மட்டும்தான் உள்ளனர். இது நமது நடிகர்களுக்கும் தெரியும்.                          

No comments: