Wednesday, November 17, 2010

கவிதைச்சரம்

கால முள் கடிகாரம் !

றே ஆறு வாரங்களில்
சிவப்பழகுக்கு ஆசைப்பட்டு
வருடக்கணக்கில் வாங்கிய
பேஸ்ட் ட்யூப் ஏராளம்.

ஐஸ்வர்யா ராயைப்
பார்த்ததில் இருந்து
பியூட்டி பார்லர்
மாதங்களுக்குள் அடைபட்டது.

ஹை ஹீல்ஸும்
லிபர்டி கட் சுடிதாரும்
வெள்ளிக்கிழமை சிறப்பு.

பாடி டியோடரன்ட்டும்
டாண்ட்ரஃப் ஷாம்பும்
அன்றாட பட்ஜெட்.

பிரதி மாத ஹலோ டியூங்களுக்கு
ஹாரிஸ் ஜெயராஜும்
யுவன்ஷங்கர் ராஜாவும்.

எச்சிலூறும் எஸ்.எம்.எஸ்.
வரப் பெறாதவர்கள்
நட்பு தேவையில்லை.

காசார நாட்களுக்கென்றே
கனகாம்பரமும்
மயில் கலர் பட்டுத் தாவணியும்.

தலயும் மேடியும்
தூங்கவிடாத
மின்சாரக் கனவுக் கண்ணன்கள்.

நினைத்தும் பார்க்கவில்லை
அப்போது
இடுக்கிய கண்களும்
ஒடுங்கிய கன்னமும்
துருத்தியிருந்த நெஞ்செலும்புமாய்
துருப்பிடித்த சைக்கிள்
வரனைத்தான்
அப்பாவின் பொருளாதாரத்துக்குள்
அடக்க முடியும் என்று.

மூன்றே வருடங்களில்
இரண்டுக்குத் தாயாகி
முப்பத்தைந்து முதுமை காட்டி
முதுகு வளைத்தது வறுமை.

பலசரக்குக் கடைக்காரன்
கடுகு கட்டிய காகிதத்தில்
'வீட்டிலேயே பியூட்டி டிப்ஸ்...

உருளைக் கிழங்கையும்
தக்காளியையும் மசிய அரைத்து
தயிர் கலந்து
இரவு படுக்கும் முன்
முகத்தில்....'

அது சரி,
அதை மூஞ்சில் அப்பிக்கிட்டா
வெந்த சோத்துக்கு
வெந்நீர் ஊத்தியா திங்கறது?

பால நாயகர்

*****************************
 
நெடுஞ்சாலை விழுங்கிய நதி !

ளம் வயதில்
இங்கு ஒரு சிறு நதி
ஓடிற்று என்றேன்
மகனிடம்.

நம்ப முடியாமல்
பார்த்தான்...
தேசிய நெடுஞ்சாலையில்
வாகனங்கள்
விரைந்தோடிக்கொண்டிருந்தன !

ஆர்.எஸ்.பாலமுருகன்

*****************************
 
போய் வா... சூரியா !

ழு நாள் விடுமுறைக்குப் பின்
திறக்கப்பட்ட வீட்டின்
தினசரி காலண்டரை
ஆளுக்கு ஒன்றாய்க்
கிழித்தெறிந்தன குழந்தைகள்.
இறந்த கால வீட்டினுள்
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரத்தின்
நிகழ கால முட்கள் துரத்த
படியிறங்கிச் செல்கின்றன
ஏழு சூரியன்களும்
ஏழு சந்திரன்களும் !

*****************************
 
அழிய மறுக்கும் அடையாளம் !


ள்ளியில் புதிதாய் தந்த
அடையாள அட்டையை
கழற்ற மறுத்து
வகுப்பாசிரியைபோல
பாவனை செய்து
'மிஸ்' விளையாட்டு
விளையாடிக் களைத்த
குழந்தையின் கழுத்திலிருந்து
அடையாள அட்டையை
மெல்லக் கழற்றும் வேளை
குழந்தை உறங்கத் தொடங்கியது
குழந்தை என்ற அடையாளத்துடன்

கே.ஸ்டாலின்    

No comments: