Thursday, October 7, 2010

உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் !

சான் ஃபிரான்சிஸ்கோ முதல் சென்னை வரை படர்ந்து விரிந்திருக்கும் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் பிதாமகர் அவர். விடுமுறைக்கு தன் இரு பேத்திகளுடன் அடர்ந்த காட்டுக்குள் 'சஃபாரி ரைட்' மேற்கொண்டார். ஓரிடத்தில் ஓநாய்கள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர், வண்டியை நிறுத்தச் சொன்னார். "எனக்குள் எந்நேரமும் இரு ஓநாய்கள் மூர்க்கமாகச் சண்டையிட்டபடியே இருக்கிறது. அது மிக ஆக்ரோஷமான போர். அகங்காரம், ஆக்ரோஷம், பயம், கோபம், பேராசை போன்ற குணங்கள் நிரம்பியது ஓர் ஓநாய். மற்றொன்றோ, தைரியம், தன்னம்பிக்கை, மனிதாபிமானம், காதல் ஆகியவற்றில் மனதிலும் ரௌதிர யுத்தம் நடத்திக்கொண்டே இருக்கும்."

தங்கள் தாத்தா சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த பேத்திகள், "எந்த ஓநாய் தாத்தா ஜெயிக்கும்?" என்று ஆர்வமாகக் கேட்டனர்.

"நீங்கள் எந்த ஓநாய்க்கு உணவிடுகிரீர்களோ, அது!"

முன்னிழுக்கும் முனைப்பு (ஃபார்வர்ட் ஃபோகஸ்), பின்னிழுக்கும் பிறழ்வு (பேக்வர்ட் ஃபோகஸ்) ஆகியவற்றுக்குத்தான் அந்த இரு ஓநாய்களை உருவகப்படுத்துகிறார்கள். நமது என்ன ஓட்டங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுகிறோமோ, அவைதான் செயல்களாக வெளிப்படுகின்றன என்பதற்கு இந்த குட்டிக் கதையை உதாரணமாகச் சொல்கிறார்கள் கெவின் மற்றும் ஜாக்கி. இந்தியாவின் டாடா நிறுவன சி.இ.ஒ-வில் துவங்கி, சோனி நிறுவன உயரதிகாரிகள் வரை, இவர்களின் 'பூம்' புத்தகத்துக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

எல்லையற்ற சுதந்திரத்துடன் சிந்தியுங்கள் !

டொயோட்டோ, ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் உலகின் உச்சத்தில் இருக்க காரணம், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சிந்தனைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சூப்பர் சுதந்திரம். டொயோட்டோ நிறுவனத்தில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ஐடியாக்களைச் சேகரிக்கின்றனர். அதாவது, ஒரு நாளுக்குக் கிட்டத்தட்ட 3,000 ஐடியாக்கள். டொயோட்டோ நிறுவன கார்களின் எண்ணிக்கையும் உலகின் மற்ற எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கும் கார்களின் எண்ணிகையும் சமமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

'1996 வாக்கில் இன்டர்நெட் வழக்கொழிந்து போகலாம்!' (1995)

'உலகம் முழுவதுக்கும் 5 கம்ப்யூட்டர்கள் தேவைப்பட்டால் அதிகம்!' (1943)

'நடிகர்கள் திரையில் பேசுவதைக் கேட்பதற்கு யாருக்கு விருப்பம் இருக்கும்?' - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் (1927)

'பொறுப்பான, புத்திசாலியான பெண்கள் வாக்குரிமையை விரும்ப மாட்டார்கள்!' (1905)

அந்தந்த காலகட்டத்தில் பிரசித்தியான வாக்கியங்கள் இவை. ஆனால், அதைத் தாண்டிச் சிந்தித்தவர்களால் இவை இருந்த இடம் தெரியாமல் போயின. ஐடியாக்கள், சாத்தியமில்லாத கற்பனைகள்தான் இந்த உலகத்தை அடுத்தடுத்த தளங்களுக்கு இழுத்து செல்கின்றன. உங்களிடம் இருக்கும் ஐடியா ஒன்றே ஒன்றுதான் என்றால், அதைவிட அபாயகரமானது வேறெதுவும் இல்லை. நிறையச் சிந்தியுங்கள்... நிறைவாகச் சிந்தியுங்கள்!


எக்ஸாம் ஃபீவர்!
                                     
உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் !

1. 
A எனது கருத்துக்களைத் தயங்காமல் மேலதிகாரிகளிடம் முன்வைப்பேன்.

B. எனது மேலதிகாரிகள் கேட்க விரும்புவதை மட்டுமே எனது கருத்தாக வெளிபடுத்துவேன்.
2. 
A நிறுவனத்தின் சக ஊழியர்கள் புகார்களை அடுக்கினால், பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடுவேன்.
B. அந்த சமயம் நானும் அவர்களோடு நானும் அவர்களோடு இணைந்துகொள்வேன்.
3. 
A எனது தவறுகளை ஒப்புக்கொண்டு, அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பேன்.
B. தவறு நேர்ந்துவிட்டது என்று தெரிந்தவுடன், எவர் மீது பழி போடலாம் என்று கவனம் திசை திரும்பும்.
4. 
A கடினமான சவால்களை வேண்டி விரும்பி ஏற்றுக்கொள்வேன். அவை என்னைத் தூண்டிச் சாதிக்க செய்யும்.
B. ஒதுங்கி ஓரம் போவேன். அவை என்னை சோர்ந்து நொந்துபோகச் செய்யும்.
5. 
A எனது உணர்வுகளை மற்றவர்கள் தீர்மநிக்கவிட மாட்டேன்.
B பலர் என்னைச் சீண்டி உணர்ச்சிவசப்படச் செய்வதுண்டு.
6. 
A செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டால், அதைச் சாத்தியப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கிவிடுவேன்.
B. செயல்திட்டங்களின் குற்றம் பட்டியலிடத் தொடங்குவேன்.
7. 
A நிலைமை சிக்கலாகி பொருளாதாரங்கள் பற்றாக் குறையாகும்போது, இருப்பதைக்கொண்டு என்ன சாத்தியம் என்று பார்ப்பேன்.
B. எவையெல்லாம் சாத்தியம் இல்லை என்று பார்ப்பேன்.
8. 
A நேரத்தையும் சக்தியையும் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் செலவழிப்பேன்.
B எனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பேன்.
9.
A நிறுவனத்தில் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 'எனது வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்க எனது தகுதியை அதிகரித்துகொல்வது எப்படி?' என்ற கேள்விக்குப் பதில் தேடத் தொடங்குவேன்.
B அந்த சமயம் நிறுவனத்தின் மீது வெறுப்பு, கோபம், விரக்தி தோன்றும்.
10 
A எனது வேலையைக் காதலிக்கிறேன்.
B அது ஒரு வேலை... அவ்வளவுதான்!
ஒவ்வொரு B பாயிண்டுக்கும் ஒரு மார்க், A பாயிண்டுக்கு ஜீரோ மார்க் கொடுத்துகொள்ளுங்கள். இந்தப் பரீட்சையின் முடிவை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் மட்டுமே கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். அதனால் 'நேர்மையான மதிப்பெண்களுடன்  இறுதிப் பகுதிக்கு வாருங்கள்.
ரிசல்ட் :
(0-2) இந்த மதிப்பெண்களுக்கு உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் மிகவும் உபயோகமான, உங்களுக்கு நீங்களே ஒரு ரோல்மாடலாக இருப்பீர்கள். ஆனால், இந்த மெச்சூரிட்டிக்கு மற்றவர்களைவிட அதிகக் கடினமான தருணங்களை நீங்களும் கடந்து செல்ல வேண்டியிருக்கும். தயங்காமல் எதிர்கொள்ளுங்கள்!

(3-5) பல சமயங்களில் நீங்களாகவே வழித்து எடுத்துக்கொள்ளும் பொறுப்புக்கள் காரணமாக, மற்ற ஊழியர்கள் உங்களை மதிக்கும் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால், சின்னச் சின்ன சறுக்கல்களின்போதுகூட, உங்களைப் பின்னால் பிடித்து இழுக்கக் காத்திருப்பார்கள். உஷார்!

(6-7) உள்ளுக்குள் ஏகப்பட்ட ஐடியாக்கள் தோன்றினாலும், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொல்லாததால் உங்களுக்குத்தான் சிக்கல். உங்களைப்பற்றி உசத்தியாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அந்தத் தகுதி இருந்தும், தயங்கிக்கொண்டு இருப்பவர்கள் நீங்கள்!
(8-10) எச்சரிக்கை, 'சடலங்கள் வேலை செய்கின்றன!' ஆம், நிறுவனத்தின் வேளையில் நீடித்திருபதற்கான குறைந்தபட்சத் தகுதி மட்டுமே உங்களிடம் மிச்சம் இருக்கிறது. உங்களுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்!      

2 comments:

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

ம.தி.சுதா said...

நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் சகோதரம்...