Friday, October 1, 2010

கவிதைச்சரம்

உளறல்

'அவளுக்கு தூக்கத்தில் நடக்கும்
வியாதி இருக்கிறதாம்'
பெண்வீட்டார் தரப்பில் இருந்து
வந்தது அனாமதேய தகவல்
பெண்ணைப் பார்த்து
அவள் அழகில் மயங்கி
வரப்போகும்
சீர்வரிசை பற்றிய
பேச்சே எடுக்காமல்
அம்மாவின் வாயடைத்து
சம்மதம் சொன்ன மறுகணம்
வந்தது அந்தத்தகவல்
நேரில் சென்று அவளிடமே கேட்டு
ஏமாற்றம் தவிர்ப்பது என்ற 
மனதின் முடிவுக்கு மறுப்புச்சொல்லாமல்
மறுகணம் அவள் முன் நான்...
'தூக்கத்தில் நடக்கும்
வியாதி இருக்கிறதா?'
என் கேள்வியில் உறைந்துப்போய்
விக்கித்து நின்றவளை
மீண்டும் ஒருதடவை
உரத்துக் கேட்டேன்

அலறியடித்து எழுந்த அம்மா
என் தோளை உலுக்கி
'எப்பதான் நிறுத்துவியோ
இந்த தூக்கத்தின் உளறலை' என்றாள்.  



**********************************

தலைவிதி

காதலை முதலில் சொன்னது
நீயா? நானா?
விஜய் டி.வி. நிகழ்ச்சி போல்
எழுந்தது விவாதம்.
நான் தான் என்று அவளும்
அவள் தான் என்று நானும்
மாறி மாறி முரண்டுபிடிக்க
'யாரா இருந்தா என்ன
என் தலை விதியை மாற்றவா முடியும்'
என்றான் என் தலை மகன்.    

அனிதா

1 comment:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நன்றாக இருக்கிறது உங்கள் கனவு...........வாழ்த்துக்கள்.