Saturday, August 14, 2010

'சும்மா' இருப்பது சுகமா?

சும்மா...
இந்த ஒற்றைச் சொல்லை சிலர் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

கல்லூரி வளாகத்தில் ஒரு நாள். மணி அடித்ததும் வகுப்பறையை நோக்கி மாணவ, மாணவியர் பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்து கொண்டிருந்தார்கள்.

சிலர் மரத்தின் அடியில் சாய்வு பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். 'என்னய்யா... இங்கே உட்கார்ந்திருக்கின்றீர்கள்?' என்று கேட்டேன். `வகுப்பு இல்லை... அதனால் சும்மா உட்கார்ந்திருக்கின்றோம்' என்றார்கள்.

வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். தெருவொன்றில் பழைய மாணவர் ஒருவரைப் பார்த்தேன். 'என்ன செய்கிறாய்?' என்றேன். 'எம்.ஏ. முடித்துவிட்டு சும்மா இருக்கிறேன்' என்றார்.

இப்படித்தான் பலர் 'சும்மா' என்ற இந்த வார்த்தையை சும்மா சும்மா சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த புண்ணிய பூமியில் சும்மா இருப்பதையே சிலர் சுகமான யோகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இயக்கம்தான் வாழ்க்கை. ஓடினால்தான் நதி. வீசினால்தான் காற்று. பாடினால்தான் குயில். பாடுபட்டால்தான் மனிதன்.

இன்றைய இளைஞர்கள் சிலர் எதையோ பறிகொடுத்தவர்கள் போல் எப்போதும் சோர்வாகவே இருக்கின்றார்கள். கல்லூரியில் பிரச்சினை. காதலில் பிரச்சினை. வேலையில் பிரச்சினை. நண்பர்களால் பிரச்சினை. பெற்றோரல் பிரச்சினை என்று எப்போதும் பிரச்சினை பிரச்சினை என்று புலம்பிக் கொண்டே இருக்கின்றார்கள். 'என்னடா இந்த வாழ்க்கை!' என்று சோர்வுப் போர்வைக்குள் முகம் புதைத்துக் கொள்கிறார்கள். அப்போதே ஆபத்து ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

துன்பம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உற்சாகம் என்ற கேடயத்தை ஏந்தி நம்மை சுலபமாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

இனிய இளைஞனே! நேற்றைய தினம் இறந்து விட்டது. நாளைய தினம் நம் வசம் இல்லை. வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிமிடங்கள்தான் நமக்குச் சொந்தமானவை. இதுதான் உயிர்த்துடிப்பானது. இதை ஒருபோதும் விரயமாக்கி விடாதீர்கள்.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் இருபத்தைந்து ஆண்டுகள் தூங்குகிறான். ஒரு சாதனையாளன் பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமே தூங்குகிறான். வாழ்க்கையில் வெற்றி பெறத் தேவை சுறுசுறுப்பும், ஊக்கமும்தான். எனவே தூக்கத்தை ஒழி. உனக்குள் தோன்றும் வெளிச்சத்தின் ஒளி.

மகாகவி பாரதி அனுபவித்த வறுமை உலகம் அறிந்தது. தான் உடுத்திஇருக்கும் கறுப்பு கோட்டின் கிழிசல்களை வெள்ளை நூலால் தைத்திருப்பாராம். கறுப்பில் வெள்ளை நூல் பளிச்சென்று அசிங்கமாகத் தெரியும் என்பதால் அந்த நூல் மீது கறுப்பு மையைத் தடவுவாராம். இப்படி வறுமை ஒரு பக்கம், தலைமறைவு வாழ்க்கை இன்னொரு பக்கம். இவ்வளவு இருந்தும் `எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!' என்று அவரால் உற்சாகமாகப் பாட முடிந்தது. அந்த உற்சாகம்தான் அவரை மகாகவி ஆக்கியது.

நீங்கள் வாழும் சூழல், உங்கள் மனது இரண்டும் உற்சாகமாக இருந்தால் எத்தகைய வேதனையும், வலியும் உங்களை ஒன்றும் செய்து விடாது. அதை விடுத்து எப்போதும் அழுது கொண்டிருப்பதன் மூலம் எதையும் அடைந்துவிட முடியாது. எழுவதின் மூலமே எதுவும் இயலும். புறப்பட்டு விட்டால் நீ போகிற பாதையை யாரும் பூட்டி வைக்க முடியாது. அதனால் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும் சோர்வு என்கிற இருட்டு. ஒருநாளும் அதற்கு இடம் கொடுத்து விடாதே உன் உள்ளத்தில் மட்டும். அதை நீ அடித்து விரட்டு.

'சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செயல்படுபவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம்' என்பார் எமர்சன்.

உழைப்பைத் தருவது உற்சாகம்தான். இடைவிடாத முயற்சியும், சுறுசுறுப்பும் உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். அவற்றை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சோர்வு தொற்றிக் கொள்வது இயல்புதான். அப்படி தன்னம்பிக்கை இழக்கும் போதும், சோர்வு வந்து சூழும் போதும் உற்சாகப்படுத்த ஒருவர் இருந்தால் போதும், பெரிய செயல்களைச் செய்ய முடியும். ஆகையால் உற்சாகப்படுத்தும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து எப்போதும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை ஒருவர் உற்சாகப்படுத்தும்போது உங்கள் ஆர்வம் அதிகமாகிறது.

பயிற்சியாய் இதைச் செய்து பாருங்கள். இரண்டு நிமிடம் சுவாசிப்பதை மட்டும் ரசித்து மூச்சை உள்ளே இழுத்து உங்கள் நுரையீரலில் காற்றை நிரப்பிப் பாருங்கள். புத்துணர்ச்சி தானாகவே புறப்பட்டு வரும். அடுத்து, சாதனையாளர்களைப் பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர்களின் புகைப்படங்களை உங்கள் அருகில் மாட்டி வையுங்கள். எப்போதெல்லாம் உற்சாகம் குறைகிறதோ அப்போதெல்லாம் அந்தப் படங்களைப் பாருங்கள். புத்துணர்ச்சி நீருற்றாய்ப் பொங்கும். வாழ்வை செம்மைப்படுத்தும் நல்ல சிந்தனைகளை எழுதி பார்வையில் படும்படி வைத்திருங்கள். உங்களுக்குள் உற்சாக அருவி ஊற்றெடுக்கும். ஆன்மா விழித்து எழுந்து விட்டால் நமக்குள் எல்லாமே உறக்கம் கலைந்து விடும்.
  
அன்பான இளைஞனே!

மாவீரர் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். மெய்சிலிர்த்தேன்.


1931 மார்ச் 23 பகத்சிங் தூக்கில் தொங்கும் நாள். 'மெழுகுத் திரி ஒளி மங்குவது போல் நானும் நாளை காலையில் ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், லட்சியங்கள் என்றும் உலகுக்கு ஒளிïட்டும். இன்று போய் நாளை மீண்டும் பிறப்போம்- எண்ணற்ற இந்நாட்டு வீரர்கள் வடிவில்' என்று தன் தம்பி குல்வீருக்குக் கடைசியாக முன்னிரவில் ஒரு கடிதம் எழுதி வைத்தார்.

தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல ஆட்கள் வந்தபோது சாவைப் பற்றிய சஞ்சலம் இன்றி, லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் பகத்சிங். அழைப்பொலி கேட்டதும், 'சற்றுப் பொறுங்கள்... ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அதுதான் பகத்சிங். சாகும் தருவாயிலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால்தான் வரலாறு அவரது வாழ்க்கைப் பக்கங்களை வரவு வைத்திருக்கிறது.

தத்துவமேதை சாக்ரடீஸ், பேரறிஞர் அண்ணா ஆகியோரும் மரணத்தின் பிடியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இனிய இளைஞனே!

ஓயாமல் சுற்றும் காற்றாடிதான் மின்சக்தியைத் தருகிறது. நீ ஓய்வெடுக்கும் நேரத்தை விட உழைக்கும் நேரம் குறையாமல் பார்த்துக் கொள். விரக்தியை விரட்டு. போர் வீரனின் கூடாரத்தைப் போல் உன் இதயத்தை எப்போதும் விழிப்போடு வைத்திரு. கவிஞர் இக்பாலின் ஒரு கவிதைச் சிந்தனை-

சோர்ந்து விடாதே
பிறையே!
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்து கிடக்கிறான்.


இந்தக் கவிதையை இதயவயலில் நடவு செய்யுங்கள். சோர்வு அகலும். சுறுசுறுப்பு உங்களைச் சுற்றி ஒளி வீசும்.
பேராசிரியர் க. ராமச்சந்திரன்
 

4 comments:

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.
1.
ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.
2.
வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

"க்ளிக்" செய்து படியுங்கள்.
3.கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

tamildigitalcinema said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

narumugai said...

இன்று தினதந்தி இலவச இனைப்பில் இதே தலைப்பை பார்த்த ஞாபகம்??

நன்றி தொடருங்கள்.
www.narumugai.com

narumugai said...

இன்று தினதந்தி இலவச இனைப்பில் இதே தலைப்பை பார்த்த ஞாபகம்??

நன்றி தொடருங்கள்.
www.narumugai.com