Saturday, June 19, 2010

தியாகிகள் தினம்

'பத்மநாபா'
ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காக சிலிர்த்தெழுந்த சிங்காரப் புயல்!
வாழத்தெரியாத வன்முறையாளர்களின் வக்கற்ற ஆயுதங்களுக்கு
பலியாகிப்போன பத்தரைமாத்து!
'மனித நேயம்'
அவனுக்கு வரலாறு தந்த மாற்றுப்பெயர்!
வரலாற்று நாயகர் வரிசையில்
வாழ்ந்துகொண்டிருக்கும் வண்ண ஒளிவிளக்கு!
உலகத் தமிழர்கள் உணரத்தவறிய உன்னத வரலாறு! 
முரண்பட்ட மனிதர்களையும்
உடன்படவைக்கும் உயர்ந்த உள்ளம்!
பகைவனையும் பண்படவைக்கும் பகுத்தறிவுப் பெட்டகம்!

'விதி வலியதோ' என்று எம்மை பேதலிக்க வைத்த

அவனது மரணம்
பல உண்மைகளை சொல்லி சென்றிருக்கிறது   
ஐக்கியம் - ஜனநாயகம் - சமாதானம்
புரிந்துணர்வு - பண்பட்ட அரசியல் - தொலைநோக்குப் பார்வை
சுயநலமற்ற சிந்தனை - ஓயாத மானுட சேவை
இவையாவும் 'பத்மநாபா' எனும் காந்தச் சொல்லிற்கான
அகராதி விளக்கங்கள்!
'அவன் இன்று இருந்திருந்தால்............?'
எனப் பலரையும் வாய் திறந்து அங்கலாய்க்க வைத்திருக்கிறது வரலாறு!
அவனது புனிதப் பயணம் இடறி எறியப்பட்ட
இருபதாவது நினைவு நாள் இன்று!
அவன் வகுத்த வழித்தடத்தில் புதிய எழுச்சியோடு
பயணிக்க தயாராக நாமும் நமது மக்களும்!
நிச்சயம் எம்முள் ஒரு பத்மநாபா மீண்டும் எழுந்து வருவான்

எனும் நம்பிக்கையோடு !

குகன்    

No comments: