Wednesday, June 2, 2010

நெஞ்சம் மறப்பதில்லை !

ஸ்கூப் என்றால் செய்தியாகத்தான் இருக்க வேண்டுமா?
இதோ உலகை உலுக்கிய சில 'ஸ்கூப்' புகைப்படங்கள்!

வறுமைக் குழந்தையும் வல்லூறும்:

ஆபிரிக்கக் கண்டத்தின் வறுமையை இந்தப் புகைப்படம்தான் உலகத்துக்கு வெளிச்சமிட்டது. எலும்பு தெரிய மயங்கிக்கிடக்கும் சூடான் நாட்டுக் குழந்தையை வல்லூறு ஒன்று தின்னக் காத்திருந்ததைக் 'கிளிக்'கியவர் கெவின் கார்ட்டர். இந்தப் படத்துக்கு புலிட்சர் விருது கிடைத்தது. ஆனாலும், 'இன்னொரு வல்லூரைப்போல காத்திருந்து புகைப்படம் எடுத்தார்' என்று கெவின் கார்ட்டரை நோக்கி கடும் கண்டனங்கள் எழுந்தன. இறுதியில் குற்ற உணர்வு அலைக்கழிக்க  தற்கொலை செய்துகொண்டார் அவர் !

வேண்டாம் யுத்தம்:

பாலஸ்தீனப் போரில் ராணுவத்தினரிடம் கெஞ்சும் ஒரு பெண்ணைப் படம் எடுத்தவர் ஃப்ரேன்கோய்ஸ் டெமுல்டர் என்ற பெண். 1976 -ல் World press விருது கிடைத்தது. 'யுத்தங்களில் அப்பாவிகள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள். அதிகாரம் உடையவர்களுக்கு யுத்தமும் பணம் பண்ணுவதற்கான வாய்ப்புதான்' என்கிறார் டெமுல்டர்!

  
வியட்நாம் போர்:

வியட்நாம் யுத்தத்தின்போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் 'கிம் புக்' என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றென்றமைக்குமான கோரச்சாட்சி !

வறுமையும் வளமையும்:
உகாண்டாவின் வறுமையைச் சொல்லும் புகைப்படம் இது. 1980 -ல் 'World Press Photo' -வுக்கான விருதை வென்றது. இதைப் பதிவு செய்தவர் மைக் வெல்ஸ். விருதுக்கு விண்ணப்பிக்காத ஒரு புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், 'பசியினால் இறந்து கொண்டு இருப்பவர்களை போட்டோ எடுத்தது விருது பெறுவதற்காக அல்ல' என்று அதை விமர்சிக்கவே செய்தார் மைக் !
நிற வேற்றுமைக் கொடுமை:

அமெரிக்க விடுதி ஒன்றில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டு இருந்த குடிநீர் வசதியைப்பாருங்கள். வெள்ளையர்கள் பயன்படுத்திய தண்ணீர்தான் இந்தக் குழாயில் வெளியே வரும். இந்தப் புகைப்படம் பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியது!

ஒக்லஹாமா அவலம்:

ஓக்லஹாமாவில் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டபோது, இறந்துபோன ஒரு குழந்தையை கையில் ஏந்தி வருகிறார் தீயணைப்புப் படை வீரர் கிரிஸ் ஃபீல்டு. இதற்கு முந்தைய நாள்தான் அந்தக் குழந்தைக்கு முதல் பிறந்த நாள். சார்லஸ் போர்டரின் இந்தப்புகைப்படம் வன்முறைக்கு எதிராக உலகம் முழுக்க விநியோகிக்கப்பட்டது. சிறந்த ஸ்பாட் நியூஸ் போட்டோகிராஃப்பிக்கான புலிட்சர் விருதையும் வென்றது!

போபால் விஷ வாயு:

யூனியன் கார்பைட் ஏற்படுத்திய விஷவாயுக் கசிவில் இறந்த குழந்தை இது. யார், என்ன என்ற விவரங்கள் ஏதும் அறியாத இக்குழந்தை புதைக்கப்படும்போது எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தை பதிவு செய்தவர் ரகுராய்!  
   

4 comments:

சி. கருணாகரசு said...

நெஞ்சை உலுக்கும் பதிவுங்க....

சரியானப்படி விளக்கங்களும்... படங்களும்.... பகிர்வுக்கு நன்றிங்க.

Riyas said...

அருமையான பதிவுங்க...

இனியும் வேண்டாமே அந்த கொடிய யுத்தம்..

nidurali said...

You are not ``ularuvaayan``
உள்ளதனை சொல்பவர்

Jayadeva said...

//ஆனாலும், 'இன்னொரு வல்லூரைப்போல காத்திருந்து புகைப்படம் எடுத்தார்' என்று கெவின் கார்ட்டரை நோக்கி கடும் கண்டனங்கள் எழுந்தன.// I agree with this, when he saw that child, instead of saving he was waiting for a vulture to come and get to the threshold of eating the child, cruel fellow.