Monday, June 21, 2010

ஆபாச சேமிப்பு வேண்டாமே!

எல்லாருக்குமே கைக்குழந்தையாகி விட்டன, செல்போன்கள். எப்போதும் சிணுங்கிக் கொண்டிருப்பது அதன் மழலைமொழி. மாறாத நேசம் நமக்கு அதன்மீது. ஆனால் குழந்தைகளுக்கும், செல்போன்களுக்கும் சில வித்தியாசம் உண்டு.

நாம் தாலாட்டுவதற்குப் பதில் அதுதான் மெல்லிசைப் பாடல்களால் நம்மைத் தாலாட்டி தூங்க வைக்கும். அதோடு அவசியமான விஷயங்களை நினைவுபடுத்தும். அதை சீராட்டி, பாராட்டி பாதுகாத்தால் நீண்டநாள் பலன் தரக்கூடியவை.

உங்கள் செல்போன்களை பாதுகாக்க இதோ அருமையான டிப்ஸ்...

* எப்போதும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் செல்போனை மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் செய்வதோடு, உங்கள் அந்தரங்க விஷயங்களையும் பாதுகாக்கும்.

* புளூடூத் மற்றும் வி.பி. போன்ற தொடர்பு இணைப்புகளை பயன்படுத்தி முடித்தவுடன் 'ஆப்' செய்துவிடுங்கள்.

* குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைக்கும் தேவையற்ற பாதுகாப்பு மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம்.

* எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வழியாக வைரஸ்கள் பரவுவதால் கவனமாக கையாளவும்.

* முன்பின் தெரியாதவர்களின் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிப்பது அல்லது 'மிஸ்டுகால்'களுக்கு தொடர்பு கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.

* எஸ்.எம்.எஸ்.கள் வழியாக வரும் புதிய அறிவிப்புகளை தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அணுகலாம். அல்லது தவிர்த்தாலும் நல்லதே.

* தேவையற்ற 'ஸ்பாம்' மெசேஜ்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம்.

* அவசியமற்ற மற்றும் அந்தரங்கமான, ஆபாச விஷயங்களை மொபைல்களில் தேவையில்லாமல் சேமித்து வைப்பதை தவிர்க்கவும்.

* உங்களது செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. நம்பரை டைரி அல்லது பாதுகாப்பான இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது மொபைல் திருட்டுப் போனால் கண்டுபிடிக்கவும், தடை செய்யவும் வசதியாக இருக்கும்.

* செல்போன்களுக்கு உறை அணிந்து பயன்படுத்துவது, டிஸ்பிளே திரையில் உராய்வு ஏற்படுவதை தடுக்கும். பட்டன்கள் விரைவில் பாதிக்கப்படுவதையும் குறைக்கும்.

* செல்போன்களை கழுத்துப் பட்டையுடன் இணைத்துப் பயன்படுத்துவது சிறந்த முறை. தண்ணீரில் விழுவதாலும், கீழே விழுந்து உடைந்து விடுவதாலும் நிறைய போன்கள் சேதமடைகின்றன.

* செல்போன்களை கைப்பையில் வைத்துப் பயன்படுத்துவதும், அவசியமான நேரங்களில் மட்டும் உபயோகிப்பதும் உங்களுக்கு நல்லது.

1 comment:

செந்தில்குமார் said...

நல்ல தகவல் தல...

என்னதான் சொல்லுங்க நம்ம பயபுலைங்க ம் ம் ம்ம்மகு.....