Friday, June 18, 2010

கவிதைச்சரம்

சந்தர்ப்பம்

பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்
சிறுது நேரத் தேடலுக்கு பிறகு
கிடைத்தன
சில நாணயங்கள்
தொலைந்தன
சிலர் நாணயங்கள்!

ப.உமா மகேஸ்வரி
பழக்கம்


பொம்மை அலைபேசியைப்
பெற்றதுமே
எல்லோரையும் விலக்கி
தனியே பேசிக்கொண்டிருக்கப் 
பழகிவிடுகிறது
குழந்தை!

லதா மகன்

உபச்சாரம்


கோடையில்
விருந்தாளிகளாய்
குளிர்ப் பிரதேசங்களுக்குச்
செல்கிறோம்
அவை நம்மை
அழைத்து அனைத்து
உற்சாகப்படுத்துகின்றன.

குளிர் காலத்தில்
நம்மிடம் விருந்தாளிகளாய்
அவை...
நம் ஊருக்கு வருகின்றன
கதவு ஜன்னல்களை அடைத்து
மூடிக்கொண்டு அவற்றை
வீதிகளில் நிற்க வைத்துவிடுகிறோம்!

வி.விஷ்ணுகுமார்

தெரியுமா?

றுக மூடிய கைகளை நீட்டி
'கைக்குள்ள என்ன சொல்லு
பார்ப்போம்' என்றாள்.
கைகளைத் தொட்டு தடவி
இன்னதென்றேன்
இன்னது இன்னது என்றேன்
ஒரு வேளை இன்னதோ என்றுகூட
சொல்லிப் பார்த்தேன்.
'ஒண்ணுமே இல்லையே' என
கைகளை விரித்து
சிரித்துப் போனால்
ஒன்றுமே இல்லாததைத் 
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?

ப.ராஜாராம்    

2 comments:

ராசராசசோழன் said...

முத்தான கவிதைகள்...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதைகள் அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள்