Monday, June 7, 2010

சரித்திரம்

கிடைத்த வாழ்க்கையை...
றிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.

பெர்னாட்ஷா, சிறுவயதில் ஒரு அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்த்து வந்தார். அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை. தனது வாழ்க்கை வீணாகிப் போகுமே என்ற அச்சம் ஏற்பட்டது. வேலையை விட்டு விலகி, தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "இறைவன் கொடுத்தது ஒரேயொரு வாழ்க்கை. அதையும் எடுபிடி வேலையில் சேர்ந்து வீணாக்க மாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

அதன்பிறகு வாழ்க்கைப் போராட்டத்தில் சலிப்பின்றி தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டார். உலகப்புகழ் பெற்ற நாடக ஆசிரியரானார். இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார்.

இந்த வெற்றி அவ்வளவு சுலபமாக அவருக்கு கிடைத்து விடவில்லை. நாவல்கள் பல எழுதித் தோல்வி கண்டார். சோதனைகளையும், வேதனைகளையும், தோல்விகளையும் அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால், துவளவில்லை. விடாமுயற்சியுடன் தன் லட்சியத்தைத் தொடர்ந்தார். வாழ்வில் வெற்றி கண்டார்.

'ஒரே முறை கிடைத்த வாழ்க்கையை வீணாக்க மாட்டேன்' என்ற அவருடைய லட்சியத்தில் அவர் கொண்ட மனஉறுதி தான் அவரை வெற்றி பெற வைத்தது.


**********

அன்பின் அடையாளம்

பெர்னாட்ஷா புத்தக கடைக்குச் சென்றார். அப்போது அவர் எழுதிய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்ததும் அதிர்ச்சியானார். அந்த புத்தகம், அவருடைய நெருங்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்தது.

உடனே பெர்னாட்ஷா, கடைக்காரரிடம் காசு கொடுத்து அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கினார். அந்தப் புத்தகத்தில், "மீண்டும் அன்பளிப்பாக அதே புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்'' என்று எழுதி கையெழுத்துப் போட்டு அந்த நண்பருக்கு அனுப்பினார்.

அதைப் பெற்றுக் கொண்ட நண்பருக்கு குற்ற உணர்ச்சி எப்படி இருந்திருக்கும்?

பெர்னாட்ஷா நண்பருக்குத் திருப்பி அனுப்பியதில் ஒரு உள்நோக்கம் இருந்தது. தன்னுடைய படைப்பின் பெருமையை உணராத நண்பருக்கு அதை உணர்த்துவது ஒரு நோக்கம்.

நண்பர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக நமக்கு அளிக்கின்ற பொருளைப் போற்றிப் பாதுகாப்பது தான் நாம் அவர்களின் அன்பை பெற்றுக் கொண்டதற்கு அடையாளம் என்பதை உணர்த்துவது மற்றொரு நோக்கம். 'நம்மை மதிப்பவர்களை நாமும் மதிக்க வேண்டும்' என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.
**********

அவமான 'நகைச்சுவை'
கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாகப் பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், "அடடா, என்ன ஆச்சரியம்...சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!'' என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனÛவியால் அவமானப்பட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்துப் போகப் பழகிக் கொண்டார்.
**********

எது உண்மை?

ஷ்யாவைச் சேர்ந்த தத்துவ ஞானி ஓஸ்பென்ஸ்கி. அவர் பல தத்துவ நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர். அவர் ஒருமுறை குர்ட் ஜெப் என்ற பிரெஞ்சுத் துறவியைப் பார்க்கச் சென்றார். அந்தத் துறவியிடம், "நாம் இருவரும் நிறையப் பேச வேண்டும்.'' என்று கூறினார்.

உடனே, குட்ஜெப் அவரிடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்து, "உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை ஒரு பட்டியலாகவும், தெரியாத விஷயங்களை இன்னொரு பட்டியலாகவும் எழுதுங்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி முதலில் பேசுவோம்.'' என்றார்.

ஓஸ்பென்ஸ்கி காகிதத்தை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தார். முதலில் கடவுள் பற்றி யோசித்துப் பார்த்தார். அவரைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆன்மாவைப் பற்றி சிந்தித்தார். அதுபற்றிப்ம் தனக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்ந்து கொண்டார். பல விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்த்து விட்டு தனக்கு எதுபற்றியும் முழுமையாகத் தெரியவில் லை என்ற முடிவுக்கு வந்தார்.

வெற்றுக் காகிதத் தைக் கொண்டு போய் குர்ட் ஜெப்பிடம் கொடுத்தார். "தெரி ந்த விஷயம் என்று பார்த்தால், எதைப் பற்றியும் எழுத முடியவில்லை.'' என்றார் ஓஸ்பென்ஸ்கி. உடனே, அவர் "அப்படியானால், புகழ்பெற்ற தத்துவ நூல்கள் எல்லாம் எப்படி உங்களால் எழுத முடிந்தது?'' என்றார். "அவை வேறொன்றுமில்லை. வார்த்தைகளைத் தோரணங்களாகக் கட்டுவதில் வல்லவனாக இருந்திருக்கிறேன். உண்மையைத் தேடுகிறபோது தான் எனக்கு அது அகப்படவில்லை.'' என்றார்.

"உண்மையை உணரத்தான் முடியுமே தவிர, எடுத்துச் சொல்ல முடியாது.'' என்றார் குர்ட்ஜெப்.

நாம் கற்பவை யாவும் உண்மையின் விளக்கங்களாகி விட முடியாது. உணரப்படுபவை மட்டுமே உண்மை என்கிற தெளிவை நாம் பெற வேண்டும்.

1 comment:

ராசராசசோழன் said...

அருமையான பதிவு...