Tuesday, June 1, 2010

கவிதைச்சரம்


வேட்டை

யல்கள்
குளங்கள்
ஏரிகள்
வனங்கள்
வேட்டையாடிய விலங்கின் மீது
காலூன்றி
நீண்ட துப்பாக்கியுடன்
புகைப்படம்
எடுத்துக்கொண்டவன் போல
எழும்பி நிற்கின்றன கட்டிடங்கள்

ராஜூ சிவசுப்பிரமணியம்
கணக்கு

ஜோசியர் வீட்டிலிருந்து
மூணாவது வீடு
கணேசன் வீடு என்றார்கள்

கண்டுப்பிடித்த பிறகு
கணேசன் வீட்டிலிருந்து
மூணாவது வீடாக இருந்தது
ஜோசியர் வீடு !

பா.ராஜாராம்.

எண்ணுதல்

னக்கு எதிரே
யார் பணம் எண்ணினாலும்
நானும் மனசுக்குள்
எண்ண ஆரம்பித்துவிடுகிறேன்
அவரைவிட மிகச் சரியாக!

மதிபாரதி

முரண்

னிமையைத் தேடினேன்
மனைவியிடமிருந்து தப்பிக்க
இப்போது
மனைவியைத் தேடுகிறேன்
தனிமையிடமிருந்து தப்பிக்க ! 

குகன்

  

No comments: