Friday, June 25, 2010

7 வது அறிவு ! - INCEPTION

'அஸ்தியில் ஜுரம்...' இந்த இரு வார்த்தைகளுக்குக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் வெளிநாட்டு சினிமா பத்திரிக்கைகளை இப்போது வாசிக்க வேண்டும். வளைத்து வளைத்து வார்த்தைப் புதிரிலும், மொழி விளையாட்டிலும் அவர்கள் கவனம் செலித்தினாலும் 'இன்ஸப்ஷன்' படம் குறித்து அனைவரும் ஒட்டுமொத்தமாக வியக்கும் சொல்லுக்கான பொருள், 'அஸ்தியில் ஜுரம்' தான். காரணம், இப்படத்தின் கதை அந்தளவுக்கு அனைவரையும் புரட்டிப் போட்டிருக்கிறது.

டாம் காப் - இவனை எப்படி அடையாளப்படுத்துவது? கிரிமினல் என்றா அல்லது மிகமிக புத்திசாலி என்றா? எதுவாக இருந்தாலும் இவன் தனித்துவமானவன். எந்த மனிதனிடமும் இல்லாத 7 வது அறிவு இவனுக்கு உண்டு. யாருக்கும் தெரியாமல், சொந்த நிழலிடம் கூட பகிர்ந்துக் கொள்ளாமல் பொத்தி பொத்தி நீங்கள் ஒரு ஐடியாவை உங்கள் மனதின் அடி அழாத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கீர்கள். அந்த ஐடியாவை விற்றால் நீங்கள் பல கோடிகளில் புரளும் கோடிஸ்வரர். அப்படிப்பட்ட அந்த ஐடியாவை நீங்கள் தூங்கும்போது உங்களுக்குள் இருந்து திருடும் சக்தி, டாம் காப்புக்கு உண்டு.

உலகிலுள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் எதிரி நிறுவனம் தயாரிக்கப் போகும் பொருளுக்கான ஐடியாவை அறிய இவனைத்தான் ஒப்பந்தம் செய்கிறது. மைக்ரோ மில்லி மீட்டர் கூட தவறு செய்யாமல் டாம் காப்பும் அந்த ஐடியாவை திருடி வந்து ஒப்படைப்பான். பணத்தை பெற்றுக் கொள்வான்.

இப்படியும் சம்பாதிக்கலாம், இப்படியே வாழலாம் என்று உண்டு, உறங்கி, சிரித்து, மகிழ்ந்து நாட்களை கடத்தி வரும் டாம் காப்பின் வாழ்க்கையில் திடிரென்று ஒருநாள் புயல் அடிக்கிறது. அந்தப் புயல் ஒரு அசைன்மெண்டின் வடிவத்தில் தாக்குகிறது. வழக்கத்துக்கு மாறான ஒப்பந்தம். செய்து முடித்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பணம் கிடைக்கும். டாம் காப்புக்கு பணம் முக்கியமில்லை. சவால். அது இந்த ஒப்பந்தத்தில் இருக்கிறது.

இம்முறை டாம், எந்த ஐடியாவையும் திருட வேண்டாம். பதிலாக ஒரு ஐடியாவை ஒரு மனிதனின் ஆழ்மனதில் விதைக்க வேண்டும். இந்த சவாலை ஏற்க டாம் தயாராகிறான். எந்த மனிதனின் ஆழ்மனதில் எந்த ஐடியாவை விதைக்க வேண்டும்? அதனால் என்ன நிகழும்? இந்தக் காரியத்தை டாம் திறம்பட செய்தானா...?

இப்படி அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கான விடையை சீட்டின் நுனியில் அமர்ந்தபடி அடுத்த மாதம் ரிலீசாகும் இப்படத்தை தியேட்டரில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். டாம் காப்பாக 'டைட்டானிக்' புகழ் லியனார்டோ டி காப்ரியா நடித்திருக்கிறார். ஹாலிவுட்டின் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார். அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது...இப்படி எழுதினால் ஃப்ளைட் பிடித்து வந்து டி காப்ரியோவே அறைந்துவிட்டு செல்வார்.

படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் படத்தின் ஹீரோ அல்ல. இயக்குனர். கிறிஸ்டோபர் நோலன் - ஹாலிவுட்டின் ஹாட் டைரக்டர் பிளஸ் தயாரிப்பாளர். சயின்ஸ் பிக்ஷன் படங்களை இயக்குவது என்பது இவருக்கு சாலையோரக் கடையில் தேநீர் சாப்பிடுவது மாதிரி. 'பேட்மேன்' படங்களின் பாகங்கள் அனைத்தும் இவரது கைவரிசைதான்.


ஆனால், அனைத்தையும் தாண்டிய புகழ், கிறிஸ்ட்ஃபர் நோலனுக்கு உண்டு. யெஸ், 'மெமண்டோ' படத்தின் இயக்குனர் சாட்சாத் இவரேதான்!                           

6 comments:

rk guru said...

thalaiva nan romba english padam yellam parkurathellai...


உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷ்-ல் என் பதிவும் வந்துள்ளது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Thinks Why Not said...

நல்லா எழுதிறீங்க... ரொம்ப எதிர்பார்க்கப்படுகிற படங்களில் ஒன்று...

இதற்கான இணைப்பை முகப்புத்தகத்தில் நண்பர்களுக்கு வழங்கியிருக்கிறேன்...

ஜெய் said...

// படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் படத்தின் ஹீரோ அல்ல. இயக்குனர். கிறிஸ்டோபர் நோலன் //

முற்றிலும் உண்மை... படம் வந்தப்பறம் விமர்சனம் கண்டிப்பா எழுதுங்க... நல்லா எழுதறீங்க...

ILLUMINATI said...

தல,நோலன் எனக்கு பிடிச்ச இயக்குனர்கள்ல ஒருத்தர்.எனக்கு memento எவ்ளோ பிடிச்சதோ,அதை விட dark knight பிடிச்சது.ஏன்னு பதிவு பின்ன வரும்.

inception பத்தி சொல்லணும்னா,trailer ஏ கலக்குது.படம் மட்டும் சும்மா விட்ருமா என்ன?ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.அப்புறம்,பார்த்துட்டு,விமர்சனம் எழுதிப் போடுங்க. :)