Friday, May 7, 2010

கவிதைச் சரம்

டைப் பயிற்சியின்போது
ஒரு 'ஈ' மட்டும்
என்னை சுற்றிச்  சுற்றிப் பறந்தது
சூரியனைச் சுற்றும் பூமிபோல....!




ன் காதல் முடியும்
காதலி
கிடைத்தவுடன் !

வா
டகைப் பணம் தந்துதவும்
நண்பனுக்கு
விசுவாசமாய் இருப்பதென்று
தீர்மானித்து முயற்சிப்பதற்குள்
வந்துவிட்டது
அடுத்த வாடகை !

க் டக் என்று
இரு வரி கவிதை
எழுதச் சொன்னார்கள்
எழுதிவிட்டேன்
''டக்
டக்"
என்று !

No comments: