Tuesday, May 25, 2010

கவிதைச் சரம்

ன் தாயகமே !
வீழ்ந்தது நீயல்ல
நாம்...?
வீழ்த்தியது அவர்களல்ல
நாம்...?
விளைவுகளை விதைத்தது
நாம்...?
விரும்பியதை விரும்பாதது
நாம்...?
ஆனாலும் உரத்துச் சொல்வோம்
'நாமார்க்கும் குடியல்லோம்'.

ராஜேஷ்  - ஈழம்

ண்ணிமைக்கும் நேரத்தில்
கனவொன்று கலைந்து போகும்
விண்ணிருந்து வந்து
தண்மதியும் ஒளிவீசும்
எண்ணிய எண்ணம் யாவும்
கானலாய் கரைந்து போகும்
திண்ணிய மனத்திடையே
திரையொன்று விரிந்துவரும்
பண்ணிய வினைகள்யாவும்
விளைவுகளாய் வினோதம் காட்டும்
தேவதைக் கதைகளும்
காவியமாய் கவிந்துவரும்
காதல் கனவுகளுடன்
மீண்டும் என்மனம்
ஓரிடத்தில் ஓய்வுபெறும். 

குரு - மதுரை

த்தியமாக சொல்கிறேன்...?
என் மனசுக்கு
திருடத் தெரியும்
திருட்டு பிடிக்காது
காதல் பிடிக்கும்
காதலிக்கத் தெரியாது
ஏமாற்றத் தெரியும்
ஏமாற்றம் பிடிக்காது
உறவுகள் பிடிக்கும்
உறவு கொள்ளத் தெரியாது
வாழ்க்கை பிடிக்கும்
வாழத் தெரியாது
ஆக மொத்தத்தில்
என் மனசுக்கு
பொய் பேசவும் பிடிக்கும்
பொய்யும் பிடிக்கும்
காயமே இது பொய்யடா...!

கவின்  - சென்னை

    

1 comment:

malgudi said...

மூன்று முத்துக்கள்.
சூப்பர்.