Wednesday, May 5, 2010

உலக நாயகனின் பிறந்த நாள் இன்று

"உலகை விளக்குவதல்ல; மாற்றியமைப்பதே தத்துவத்தின் பணி" என்ற அடிப்படையின் மீது மாக்சியம் உருக்கொண்டது. மாக்சியம் வெறும் விளக்கங்கள் கூறும் தத்துவங்கள் அல்ல. அது தத்துவ நடைமுறை.; நடைமுறைக்கான தத்துவம்.

மனித குலத்தைச் சுரண்டலில் இருந்தும் சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவித்து சரிநிகர் சமானமான மேலான சமூக அமைப்பை ஆக்குவது என்ற லட்சியக் கனவு 'கார்ல் மாக்ஸ்' எனும் மேதைக்குள் தத்துவமாக 'மாக்சியம்' உதயமாகி அது அறிவியல் பூர்வமான வேலைத்திட்டமாக உருவாகியது. அது மனித குலம் மொத்ததுக்குமான வேலைத்திட்டமாகும்.

அறிவியல் யுகத்து அறிவுச்  சமூகத்தின் தத்துவக் கைவிளக்காய் - அறிதலுக்கான கருவியை - மாற்றியமைப்பதற்கான திட்டமாய் மாக்சியம் மட்டுமே விளங்கமுடியுமென்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இத்தகைய அற்புதமான தத்துவத்தை தந்த, மனித குலத்தின் விடிவெள்ளி கார்ல் மாக்ஸ் பிறந்த நாள் இன்று. அந்த உலக நாயகனின் 192 வது பிறந்த நாளை உலக மக்களுடன் இணைந்து உளறுவாயனும் கொண்டாடி மகிழ்கிறது. அவரது நினைவை போற்றும் வகையில் 'கார்ல் மாக்ஸ் டாக்குமெண்டரி' இதோ உங்கள் பார்வைக்கு...     



1 comment:

Anonymous said...

தலைப்பை பார்த்தவுடன் "ஒலக்க" நாயகனின் பிறந்த நாள் என்று நினைத்து விட்டேன்.