Thursday, April 15, 2010

புகை மூளைக்குப் பகை!

புகைப் பழக்கம் கொடியது. புற்றுநோய், இதய வியாதி என பல பாதிப்புகளை ஏற்படுத்தும். புகைப்பது மூளைத் திறனையும் பாதிக்கும் என்கிறது புதிய ஆய்வு.

ஏபர்டீன் பல்கலைக்கழகம் புகைப்பழக்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரம் பேர் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த வயதுடைய இளைஞர்களுக்கு சராசரியாக மூளையின் I.Q திறன் 101 வரை இருக்க வேண்டும். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த  I.Q. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் விரைவில் மூளை பாதிப்பை அடைகிறார்கள். ஆய்வில் புகைப்பழக்கம் உடையவர்கள் 7 புள்ளிகள்  I.Q திறனை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் சரியான முடிவெடுப்பதில் தவறுகிறார்கள். மேலும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது, ஆரோக்கியமற்ற உணவு களை உண்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆய்வில் 28 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டுக்கு குறையாமல் புகைக்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் 1947-ம் ஆண்டில் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீண்டும் சோதித்துப் பார்த்ததில் அவர்களின் உடல் செயல்பாடுகள் மற்றவர்களைவிட கவலை அளிப்பதாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2 comments:

ராம்மோகன் said...

புகைப்பழக்கத்தினைப் பற்றிய இடுகையை எழுதியதற்கு நன்றி...தங்களது இடுகைக்கான இணைப்பை எனது பதிவில் கொடுத்துள்ளேன்...

இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்தவனாய் இந்த இடுகையை http://rammohan1985.wordpress.com/2010/03/17/quit-smoking/ எழுதினேன்...Tamilish திரட்டியில் 250 வாக்குகள் பெற்று இந்த இடுகையை அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் எடுத்துச் சென்று சமூக மறுமலர்ச்சிக்கு ஒரு படியாய் இருக்க வேண்டுமென்பது என் அவா மற்றும் குறிக்கோள். எந்த அளவுக்கு இது கைகூடும் என்பது கேள்விக்குறியே! ஏனெனில் கவர்ச்சியான தலைப்புகளில் இடுகைகளிட்டு காமக் கிளர்ச்சியை உண்டு செய்யும் இடுகைகளுக்கு மத்தியில் நமது இது போன்ற “அறுவைகளுக்கு” ஆதரவு தர குறைவானவர்களே இருப்பர் என்பதை அறிகின்றேன். என்றாலும் “முயற்சி திருவினையாக்கும்” என்பதனையும் உணர்ந்தவனாய், புதிய விடியலை நோக்கி.... ராம்மோகன்
இச்சமயத்தில் Tamilish தளத்தில் நிகோடின் செய்யும் லீலைகள்! என்னும் இடுகைக்கு வாக்களித்த 21 நல் உள்ளங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்