Tuesday, April 27, 2010

ரோபோ 'வேக்வம் கிளீனர்'!

வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது இல்லத்தரசிகளுக்கு சற்று சிரமமான வேலை. சிலர் தூசுகளை இழுத்து உறிஞ்சி சுத்தப்படுத்தும் வேக்வம் கிளீனரை பயன்படுத்துகிறார்கள். இதை ஒருவர் கையில் பிடித்துக் கொண்டு இயக்க வேண்டும். இதற்குப் பதிலாக தானாக இயங்கும் 'ரோபோ வேக்வம் கிளீனர்`'வந்துவிட்டது.

இந்த ரோபோ ஒரு அங்குல உயரமே உடையது. எனவே சோபா, மேஜை போன்ற பொருட்களுக்கு அடியிலும் சென்று எளிதாக சுத்தப்படுத்தும். இதில் ஒரு கேமரா மற்றும் சென்சார் போன்ற நவீன கருவிகள் இருக்கும். எனவே ஆள் வருவது, பொருட்கள், சுவர் இருப்பது அனைத்தையும் கண்காணித்து சுத்தப்படுத்தும். ஆன்லைன் மூலமாகவும் இயக்கலாம். அறையின் வடிவத்தையும், பொருட்கள் இருக்கும் இடத்தையும் வரைபடமாக இதில் இணைத்துவிட்டால் ரோபோ தேவையற்ற இடங்களுக்கு செல்வதையும் தடுக்கலாம்.

360 டிகிரி கோணத்திலும் சுழன்று சுத்தம் செய்யும். குளிக்கச் செல்லும்போது ரோபோவை ஆன் செய்துவிட்டால் திரும்பி வரும்போது வீடு சுத்தமாக இருக்கும். இந்த ரோபோ இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயன்தரும்.

சைனாவேசன் ஜி182 எனப்படும் இந்த ரோபோவின் விலை கொஞ்சம் (ரூ.3ஆயிரம்) அதிகமாகும்.

No comments: