Monday, April 26, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்


ஐ.பி.எல். மகுடம் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.



ஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்



கடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நேற்று கோலாகலமாக முடிவடைந்தது. நேற்றிரவு இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக 40 மணி நிமிடங்கள் கண்கவர் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தன. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'லகான்' படத்தில் இருந்து சலே சலோ என்ற பாடலை முதலில் பாடினார். அதனை தொடர்ந்து 'வந்தேமாதரம்' மற்றும் அவருக்கு ஆஸ்கார் விருது பெற்றுத்தந்த 'ஜெய்ஹோ' பாடலையும் பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினார். பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் ஷாகித் கபூர் ஆகியோர் கலக்கலாக நடனம் ஆடி மகிழ்வித்தனர். சம்பா பாணியில் நடனம், லேசர் ஒளி வெள்ளம், வாணவேடிக்கை என்று அரங்கில் குழுமியிருந்த சுமார் 55 ஆயிரம் ரசிகர்களையும் இந்த வண்ணமிகு விழா கொள்ளை கொண்டது.

1 comment:

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com