Monday, April 5, 2010

இதெல்லாம் ஒரு செய்தியா!

முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் 'அதிசயம் ஆனால் உண்மை' என்ற தலைப்பில் சில செய்திகள் வரும். மூன்று தலைகளுடன் புலிக் குட்டி, பிறந்தவுடன் 'அப்பா!' என்று பேசிய குழந்தை, பியானோ வாசிக்கும் குரங்கு என்பது போன்ற துணுக்குகள் இந்தத் தலைப்பில் இடம் பெரும். இன்று எந்த செய்தியுமே அதிசயம் இல்லை என்று அரசியல்வாதிகள் பண்ணிவிட்டதால் இப்போது அது போன்றவை எதுவும் வருவதில்லை. இருந்தாலும் சமீபத்தில் நான் படித்த சில விஷயங்களை இங்கே தருகிறேன்.

அகரப் பெருமை

உலக நாடுகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அசுர வரிசைப்படுத்தினால் 'ஏ' (A) எழுத்தில் ஆரம்பமாகும் முதல் நாடு ஆப்கானிஸ்தான். ஆனால் கடைசி எழுத்து 'A' யாக இருக்கும் நாடுகள் பல இருக்கின்றன.

திருமண வயது   

பெண்கள் பத்து வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதி இங்கிலாந்தில் இருந்தது - 1875 ஆம் ஆண்டு வரையில். 1885 இல் இது 13 வயது என்று உயர்த்தப்பட்டது. இப்போது 16 வயது.

அவசியமான திறமை

உலகத்தின் முதல் விமானப் பனிப் பெண் - ஏர் ஹோஸ்டஸ் - மிஸ் டாஃபென் கியர்லி என்பவர். 1936ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல்முதலாக பிரிட்டிஷ் விமானத்தில் பணியாற்றினார். அப்போது பனிப் பெண்கள் நியமனத்துக்கு வைத்திருந்த தகுதி: டைப் செய்யவும், மது பானங்களை சிறப்பாகக் கலக்கி வழங்கவும் தெரிய வேண்டும்.

நீளமான சொல்

வலது கையை உபயோகப்படுத்தாமல் இடது கையால் மட்டுமே டைப் செய்யக் கூடிய ஆங்கிலப் பெயர்களுள் மிக நீளமானது: STEWARDESSES

விசித்திரப் பந்தயம்

 'நேனானா' என்ற பந்தயம் அலாஸ்காவில் ஆரம்பித்து இன்று உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ளது. தொண்ணூறு வருடங்களுக்கு முன் அலாஸ்கா நாட்டில் பனியினால் ஒரு ரயில் நின்றுவிட்டது. அதன் சிப்பந்திகள் போராடித்துப் போய் இந்தப் பந்தயத்தைத் தொடங்கினார்கள். அதன்படிப் பனிப்பரப்பின் மீது ஒரு மூன்று கால் ஸ்டாண்டை நிறுத்தி வைக்க வேண்டியது. எப்போது பனி உருகி அது தண்ணீரில் இறங்கத் தொடங்கும் என்று நேரத்தை ஊகிக்க சொல்லிப் பந்தயம் கட்ட வேண்டியது -
அலாஸ்க நாட்டில் யாரும் யானை வைத்துக் கொள்ளக் கூடாது. சட்டப்படி அது குற்றம். சர்கச்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்குத் தரப்பட்டது.

சதிகாரர்களின் அடையாளம்

நீண்ட கால் சட்டை (பான்ட்) அணிபவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று ஜார் மன்னரான முதலாவது அலெக்ஸாண்டர் கருதினார். அதற்குத் தடையும் விதித்தார்.

ஏழாம் எட்வர்ட்டின் மனைவியான ராணி அலெக்சாண்டிரா கால் ஊனத்துடன் இருந்தார். அவருடைய அந்தப்புரத்துக்கு வரும் விருந்தாளிகள் நேராக நடக்க மாட்டார்கள். அதை ராணி அவமதிப்பாக எண்ணுவாள் என்பதால் நொண்டி நோண்டியே நடப்பார்கள்.

பாம்புகளின் பட்டாளம் 
கொடிய விஷமுள்ள பாம்புகளின் தர (!) வரிசையில் இந்தியாவின் நாகப் பாம்பு பதினைந்தாவது இடத்தில் இருக்கிறது. முந்தின பதினாலு கொடிய வகைகளும் ஆஸ்திரேலியாவில் உள்ளன.

பலூனின் பிதா

குழந்தைகள் விளையாடும் பலூனை முதன் முதலில் கண்டு பிடித்தவர் புகழ் பெற்ற விஞ்ஞானியான  மைக்கேல் ஃபாரடே. தான் தயாரித்த வகை வகையான GAS - களைப் பரிசோதனைக்காக அடைத்து வைப்பதற்காக அந்த பலூன்களைக் கண்டு பிடித்தார்.

வாழைப்பழப் போட்டி 

வாழைப் பழங்களை விழுங்கும் போட்டி முதல் முறையாக நடைபெற்றது எஸ்டோனியா நாட்டில். அதில் வெற்றி பெற்றவர் மூன்று நிமிடங்களில் பத்து வாழைப்பழங்களை உண்டார். அவர் கையாண்ட தந்திரம்: பழத்தோடு தோலினையும் சேர்த்து விழுங்குது.

கூடைப் பந்தின் ஜாதகம்

கனடா நாட்டு ஜெமேஸ் நாஸ்மித் என்பவர்தான் என்பவர்தான் கூடைப் பந்து விளையாட்டைக் கண்டுப்பிடித்தவர். கால்பந்து வீரர்களின் குழுவுக்குப் பயிற்சியாளராக இருந்த அவர் குளிர் காலத்தில் தன் அணியினர் சோம்பிக் கிடக்க கூடாது என்பதற்காக இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தார்.

தாடி நீளம்

உலகத்திலேயே மிக நீளமான தாடி வளர்த்தவர் நார்வே நாட்டு ஹான்ஸ் லால்சேத் (அன்றைய ரெகார்டின்படி). 1972ம் வருடம் இவர் இறந்த போது தாடியின் நீளத்தைக் கணக்கெடுத்தார்கள். பதினேழரை அடி என்று தெரிந்தது. அந்த தாடியை அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சிக் கழகத்துக்குத் தானமாகக் கொடுத்துளார்கள்.

அழகுக்கு ஆராதனை

பதினாறாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டை ஆண்ட பிலிப் மன்னர் அழகை ஆராதித்தவர். அழகு இல்லாதவர்களைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. சரும நோய் உள்ளவர்களுக்கு சிறை தண்டனை வித்தித்தார்.       

ரா.கி.ரங்கராஜன்  

1 comment:

Anonymous said...

எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளவும்