Friday, April 2, 2010

உலக சிறுவர் நூல் நாள்

 அட...! இதுக்கு ஒரு நாளான்னு ஆச்சர்யபடவைக்கும்
லிஸ்டில இந்த சிறுவர் நூல் நாளையும் இனி சேர்த்துக்கவேண்டியதுதான்!

உலக சிறுவர் நூல் நாள் 1967 லேர்ந்து சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு  நாளாக இருக்கிறது.

சிறுவர் சிறுமியருக்கு, சிறு வயது முதலே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை உண்டாக்கவும், சிறுவர் சிறுமியருக்கான தனித்துவம் வாய்ந்த வகையிலான புத்தகங்களின் எண்ணிக்கையை பெருக்குவதுமே இந்நாளின் மிக முக்கியமான நோக்கமாகும்!

இந்நாளினை உலகெங்கும் பல்வேறு தனித்தனிபிரிவுகளாக செய்லபட்டுவரும் தன்னார்வ அமைப்புக்களின் ஒருங்கிணைந்த அமைப்புத்தான் 'IBBY' (The International Board on Books for Young People ) என்றழைக்கப்படும் உலக சிறுவர் நூல் வாரியம்.

ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை ஒட்டிய சிறார்களின் நூல் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலமைந்த அழகிய வண்ண படங்கள் இந்த சிறுவர் புத்தக வாரியத்தால் வெளியிடப்படுக்கின்றது

சமீப வருடங்களில் வந்த தீம்களின் அணிவகுப்பினையும் மற்றும் நாடுகளின் விபரங்களை இங்கு காணலாம்.

அந்த நாட்டில் சிறார்களுக்கு சிறுவயதில் முதலில் சொல்ல துவங்கும் கதைகள் புத்த சமயத்தின் அடிப்படையிலமைந்தவையாம்!
 
படத்தினை காண்கையில் ஒரு அழகான கவிதை கதை படித்துக்கொண்டிருக்கும் காட்சி ஓவியமாக புலப்படுகிறதா?

நாளினை கடப்போம்!
நாளும் நூல்களை கற்போம்!
சிறார்களுக்கு கற்பிப்போம்!

No comments: