Saturday, March 6, 2010

ஓட்டைக் காலணா

பம்பரக் கயிறு கட்டிய
நாகூர்
இரண்டடுக்கு
ஓலை வெற்றிலைப் பெட்டியை
அவிழ்த்தார் என் தாத்தா!

எதிரில் ஐந்து வயது சிறுவனாக நான்...
ஒரு வெட்டுப்பாக்கைப் போட்டுக்கொண்டு
இரண்டாகக் கிழிக்கப்பட்ட
வெற்றிலையின்
ஒரு பகுதியை
சுண்ணாம்பு தடவிப் போட்டுக்கொண்டார்
என் கண்கள்
பாக்குகளுக்கிடையில் கிடக்கும்
ஓட்டைக் காலணாவில் லயித்தன
புகையிலைக் காம்பு ஒரு துண்டு
அவர் வாய்க்குள் சென்றது

நான் பவ்யமாக
உட்கார்ந்திருக்கும் காரணம்
தாத்தா அறிவார்

நான் எதிர்பார்த்தது போலவே
'இந்தா' என்றார்
ஓட்டைக் காலணாவை
இடதுகை சுண்டுவிரலில்
மாட்டிக்கொண்டேன்
உலகம் என் கைக்குள் வந்தது

சௌரிராஜன்
நன்றி யுகமாயினி

4 comments:

Madurai Saravanan said...

காசே தான் கடவுளைய்யா. அருமை. வாழ்த்துக்கள்.

vidivelli said...

நல்லாயிருக்குங்க.................

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

ம்.. நல்லாத்தான் இருக்குது போங்க!

அ.சலீம் பாஷா said...

ம்..நல்லாதான் இருக்கு!