Tuesday, March 30, 2010

அய்யப்ப மாதவன் கவிதைகள்

ந்நூறு ரூபாய் பார்த்துப் பல மாசமாச்சு
தினக் கூலிகளின் தினப் பேச்சு!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கடன்காரன்
பொண்டாட்டியைக் கேட்டுவிட்டான்!

ரு பியர் குடிக்க கூப்பிட்டார்கள்
 ஓடிப் போய்ப் பார்த்தால்
ஒருத்தனையும் காணவில்லை!

புல்லாங்குழல் விற்பவனால்
அனைத்தையும் இசைக்க முடிந்தது!

சுனாமி வந்தது
சுருட்டிக்கொண்டார்கள்!

புயல் வந்தாலும் பரவயில்லை
மழை வேண்டும் நகரத்திற்கு!

ங்கம் விலை ஏறினால் என்ன?
இறங்கினால் என்ன?
மஞ்சள் கயிற்றைத்
தாலியாக நினைப்பவளுக்கு!

னவுகளில் மட்டுமே காதலிகள்
முத்தமிடுகின்றனர்
நிஜத்தில் கல்யாணத்துக்குப் பிறகு
என்கின்றனர் சினிமா வசனம் போல!

சித்தவனுக்குச் சோறு இல்லை
படையலிடுகிறார்கள்
பரம்பொருளுக்கு!

வீடு முழுக்க பெரிச்சாளிகள் தொல்லை
நாடு முழுக்க சாமியார்கள் தொல்லை!

பாலைக்கு
நிலம் உண்டு
ஏழைக்கு எதுவும் இல்லை! 

காசு இருந்தால்
விஷச் சாராயமும்
குடிக்கலாம்!

நன்றி ஆ.வி.  

No comments: