Monday, March 29, 2010

உமாஷக்தி கவிதைகள்

வாழ்க்கைபற்றிய சிறு குறிப்பு

சில பேர் வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்கிறார்கள்
சில பேர் வாழ்க்கையை
வேடிக்கை பார்க்கிறார்கள்
சில பேர் புதுமைப்பித்தன்
உரைத்ததைப்போல
வாழ்வதாகச் சொல்கிறார்கள்...
ஆனால் எல்லோரையும்
கடந்து செல்கிறது
வாழ்க்கையெனும் மகாநதி
உண்மையில் வாழ்க்கை
மிகச் சுலபமாக
நம் கண் முன்னேயே
கரைந்து போகிறது
குழந்தையின் கையில் உள்ள
குச்சி ஐஸைப் போல!

**********

அவன் முகம்

ன்றோ பார்த்தது
ஒரு முகம்
திரு முகம்
என்றேனும் வருமோ
சிறு கனவிலேனும்?



**********

முத்தங்கள்

திர்ந்த நட்சத்திரங்கள்
உன் இறந்த முத்தங்கள் !

**********

உயிர்

முத்தத்தால்
ஒவ்வொருவரும்
உயிரையும் அன்பையும்
காதலையும்
உறிஞ்ச எத்தனித்து
வெறும் உமிழ்நீரோடு
முடிந்து போகிறார்கள்!

**********

அவன் சொன்னது

வன் சொன்னான் -
எப்போதாவது நினைத்தால் நூறு வயசு
எப்போதும் நினைத்தால் ஆயிரம் வயசு

எப்போதாவது நினைத்தால் புரையேறும்
எப்போதும் நினைத்தால் அதன் பெயர்
சுவாசம்

எப்போது நிகழ்ந்தது என்றேன் அவனிடம்
எப்போதும் நிகழ்வது என்றான்!

**********

மரணம்

ரணம் சில சமயம் மரணமாக வருகிறது
சில சமயம் காதலாகவும் கனிகிறது!

**********

பிரியம்

ல்லோரிடமும் இருக்கிறது
பல சமயம் அது
மாவோ சொன்னதைப் போல
பன்றியின் முன்
இறைத்த முத்தாகிக்கிடக்கிறது!  

No comments: