Tuesday, March 9, 2010

பாராமுகம்

இச்சா ?... இனியா ?...
காயா ?... பழமா ?...
எனச் சொல்லி
கோடுகளின் பாதம் படாமல்
கட்டங்கள் தாண்டி
அண்ணார்ந்த நிலையிலிருந்து
தலை குனிய
அவள் நெற்றியில் ஒட்டியிருந்த ஓட்டுச்சில்
கீழே விழுந்தது.
பாண்டி ஆட்டம்
சுவாரஸ்யம் ஆனது.

ஒருமாத இடைவெளிக்குப்பின்
அவள்
என் எதிர் வந்தாள்
முகம் இருக்க
ஒரு வசிகரமாற்றம்...
கன்னக் கதுப்புகளில் சில பருக்கள்
என்னைத் தெரிந்தவளாகக்
காட்டிக் கொள்ளாமல்
அவள்
கடந்து போனாள்
நான்
அந்நியனானேன்.

சௌரிராஜன்  
 

No comments: