Friday, March 5, 2010

பயங்கரவாதியைத் திருத்த முடியுமா?

இன்று உலக நாடுகள் மொத்தத்தையும் ஆட்டிப் படைக்கும் பிரச்சினை பயங்கரவாதம். காஷ்மீரிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆப்ரிக்காவிலும் மும்பையிலும் டெல்லியிலும் பயங்கரவாதிகள் செய்யும் அட்டூழியங்களை எப்படி அடக்குவது என்று புரியாமல் எல்லாரும் விழி பிதுங்குகிறார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை அடக்குவதில் எல்லா தேசங்களும் முனைந்து செயல்பட்டு வருகின்றன.

எனினும் சில 'நல்லவர்கள்' உலகெங்கும் இருக்கிறார்கள், மனிதாபிமானம் இவர்கள் கண்ணை மறைக்கிறது. 'பயங்கரவாதிகளும் மனிதர்கள் தானே? அவர்களைக் கொடுமைப்படுத்தாமல் மென்மையாக நடத்த வேண்டும்' என்பது இவர்களுடைய கட்சி. இப்படிப்பட்டவர்களைக் கிண்டல் செய்யும் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவமும் கனடா ராணுவமும் துருப்புக்களை அனுப்பியிருக்கின்றன. அவர்கள் பயங்கரவாதிகளை அன்புடன் நடத்துவதில்லை என்று கனடா நாட்டு அம்மையார் ஒருவருக்குத் தோன்றியது. தனது தேசத்து ராணுவத் தலைமையகத்துக்கு இது குறித்து அடிக்கடி கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். முதலில் சில காலம் அவருடைய தொணதொணப்பைக் கனடா ராணுவ இலாகா பொறுத்துக் கொண்டது. அந்த அம்மையாரின் தொல்லை ஒரு பதிலை அனுப்பியது. அதாவது -

அன்புள்ள அம்மணி,
ஆப்கானிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு, ஆப்கன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நபர்களைப் பற்றி ஆழ்ந்த கவலையும் அக்கறையும் கொண்டு தாங்கள் எழுதிய கடிதங்கள் கிடைத்தன. தங்களுடைய இரக்க சுபாவமும் மனிதாபிமானக் கண்ணோட்டமும் பாராட்டத்தக்கவை. நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

தங்களைப் போலவே மனிதாபிமானம் கொண்டவர்கள் பல பேர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்காகவே கனடா நாட்டு ராணுவத் துறை ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு அனுதாபியின் வீட்டுக்கும் ஒரு பயங்கரவாதியை விருந்தாளியாக அனுப்பி வைப்பது என்பதே இந்தத் திட்டம். அதன்படி உங்களுக்காக ஒருவனைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அவனுடைய பெயர் அலி முகமது பின் அகமது. சுருக்கமாக அகமது என்றே அழைக்கலாம். இவனைப் பலத்த பாதுகாப்புடன் அடுத்த புதன்கிழமை உங்கள் டோரான்ட்டோ வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆப்கானிஸ்தான் சிறையில் என்னென்ன வசதிகள் தர வேண்டியது உங்கள் பொறுப்பு. அவனை நல்லபடி நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்களா என்பதை எங்கள் அதிகாரியொருவர் அவ்வப்போது உங்கள் வீட்டுக்கு வந்து கண்காணிப்பார்.

அகமது ஒரு முரடன் வன்முறைகளில் நாட்டமுள்ளவன். ஆனால் அன்புடன் நடத்தினால் நல்லவனாக இருப்பான் என்று நீங்கள் அடிக்கடி சொல்வதால் அவனை மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். கலாசார வேறுபாடுகளால்தான் அவன் இப்படி இருக்கிறான் என்பது உங்கள் உங்கள் கொள்கை. எனவே தக்க பாடங்களை நடத்தி அவனை நமது கலாச்சாரத்துக்குக் கொண்டு வாருங்கள்.

உங்களுடைய தத்துவப் பிள்ளையாக வரவிருக்கும் அகமது எதிரியை ஒண்டி ஆளாக கொலை செய்வதில் வல்லவன். ஒரு சின்னப் பேனாக் கத்தி அல்லது நகம் வெட்டும் கத்திரி இருந்தாலும் போதும், தீர்த்துவிடுவான். இந்தத் திறமைகளை செய்து காட்டும்படி உங்கள் 'யோகா' வகுப்பில் அவனிடம் கேட்காதீர்கள். இன்னொரு விஷயம். வீட்டில் கிடைக்கக் கூடிய சாதாரணப் பொருள்களைக் கொண்டே வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை ஒரு கலையாகப் பயின்றவன் அவன். அத்தகைய பொருள்களை அவன் கண்ணில் படாதபடி வைப்பது நலம்.

உங்கள் குடும்பத்தில் உள்ள வயது வந்த பெண்களிடம் அவன் பழகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் என்றால் ஈனப் பிறவிகள் என்பதும் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதும் அகமதின் கொள்கை. பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டுமென்பதில் அவன் ஒரு கண்டிப்பு வைத்திருக்கிறான். அதை மீறாதீர்கள். மீறுவோரிடம் அவன் வன்முறை காட்டுவான். அவனுடைய கட்டுபாடுகளையும் கலாச்சாரக் கொள்கைகளையும் மத நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டுமென்று உங்கள் கடிதங்களில் நீங்கள் பல முறை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு இப்போது சந்தர்பம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு இப்போது சந்தர்பம் ஏற்பட்டிருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வணக்கத்துடன், கார்டன் ஓ கனார், தேசியப் பாதுகாப்பு அமைச்சர், கனடா.


ரா.கி.ரங்கராஜன்                 

2 comments:

Hi said...

write about hindu terrorism in sri lanka

Anonymous said...

just think. why the people become terrorist. they under occupation.same like all the ppl india.we are under occupation of papan(bhramins).