Friday, March 26, 2010

கவிதைச் சரம்

கடவுள் இல்லா திசை !

ட்டுக்கெட்டு அறையில்
கட்டிலின் கால்மாட்டில்
கடவுள் படம்.
கடவுள் இருக்கும் திசை
கால் நீட்டாதீர்கள்
என மனைவி அதட்ட...
கடவுள் இல்லாத
திசை சொல்
கால் நீட்டிக்கொள்கிறேன்
என்றேன்!

சாஸ்தா செல்வராஜ்


****************************

எனக்குப் பிடித்த நண்பன்

னக்குப் பிடித்த நண்பன் என்று
கட்டுரை எழுதித் தர
வேண்டும் என்றான்
ஏழு வயது மகன்.
உனக்கு மிகப் பிடித்த நண்பனின்
பெயர் சொல் என்றேன்
ஆதர்ஷ் என்றான்
உன்னுடன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவனா?
இல்லை
உன்னோடு நிறைய விளையாடுவானா?
இல்லை
அவனுக்கு என்ன பிடிக்கும்?
தெரியாது
உனக்கு நிறைய சாப்பிடக் கொடுப்பானா?
இல்லை
உன்னைவிட நல்லாப் படிப்பானா?
ரெண்டு பேரும் நல்லாப் படிப்போம்
பின் எதனால் சொல்கிறாய்
அவன் உனக்குப் பிடித்த நண்பன் என்று?
ஏன்னா, நான்தான் அவனுக்கும்
பிடித்த நண்பன்!


 க.ஆனந்த்

****************************

விலங்குநேயம்!

'ஜமானி குழந்தை பெற்றுவிட்டாள்'
டைகரும் ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோசமாக வால்களை ஆட்டியபடி.
அக்கம்பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக்கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களைப்போலவே!

ஜனா கே 

1 comment:

A.சிவசங்கர் said...

கடவுள் இல்லாத இடம் சொல்லு காலை நிட்டுகிறேன்

நிதியானத சுவாமி பக்கம் நீட்டுங்க