Thursday, March 11, 2010

மருத்துவம் அறிவோம்

சோதனைக் குழாய் குழந்தை...

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறுவது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி 25 வயதுகளிலே குறைந்து போவதாகவும், 30 வயதுக்கு மேல் திருமணமாகும் பெண்கள் சோதனைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பது பற்றியும் கேட்டப் போது இதுப் பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

'இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?' எனும் கேள்வியோடு தொடர்கிறார்...

மனைவியின் சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளிப்பட்டு கருக்குழாய் வழியாக வரும் -- கணவன் - மனைவி உடல் சேர்க்கையால் கணவரிடமிருந்து உயிரணு வெளிப்படும் -- இரண்டும் கருக்குழாயில் கலந்து சினைமுட்டையாகி கருப்பைக்கு வந்து பதியமாகும். இதுதான் இயல்பான கருத்தரிப்பு.
சோதனைக் குழாய் முறையில் உயிரணுவையும் கருமுட்டையையும் உடலிலிருந்து வெளியே எடுத்து, சேகரித்து ஆய்வகத்தில் ஒன்றாக்கி, பிறகு கருப்பைக்குள் செலுத்தி பதியமாக்கி கருத்தரிக்கச் செய்வார்கள். கருமுட்டையையும் உயிரணுவையும் ஒன்றாக்கி, கருப்பைக்குழாய், பெண்ணின் உடலுக்குள் செல்லும் செயலாக்க முறையை, வெளியே ஆய்வகத்தில் செய்வது சோதனைக் குழாய் முறையாகும்.

இது படிப்படியாக ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது.

  • கருமுட்டையைத் தூண்டி முதிரச் செய்து விடுவித்தல்.
  • முதிர்ந்து வெளியாகும் கருமுட்டையைச் சேகரித்தல்
  • உயிரணுக்களைச் சேகரித்து அதில் தரமானவைகளை மட்டும் தனியே பிரித்து எடுத்தல்
  • ஆய்வகத்தில் உயிரணுவையும் முட்டையையும் ஒன்றாகச் சேர்த்து - கருவாக்கம் செய்து - கரு உயிரை வளர்த்தல்
  • கரு உயிரை கருப்பைக்குள் செலுத்துதல்

இச்செயல் முறையை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கமாகப் பார்ப்போம்

முதலில் பெண்ணின் சினைப்பை, ஹார்மோன் போன்றவை பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு பிரத்தியேகமான ஹார்மோன் ஊசியைப் போட்டு முட்டையை முதிர்ந்து வரச் செய்ய வேண்டும். முட்டை முதிர்ந்து வரும் நேரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். சரியான நேரத்தில் மயக்க மருந்து கொடுத்து, அல்ட்ரா சவுண்ட் காட்டும் வழியில் சிறிய ஊசியைச் செலுத்தி, கருமுட்டையை வெளியே எடுத்து சேகரிக்க வேண்டும். 12 முதல் 15 முட்டைகளைச் சேகரித்து, கணவரின் உயிரணுவோடு கலக்கச் செய்வார்கள். ஏதாவது ஒரு உயிரணு கருமுட்டையை துளைத்து, கருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து சினை முட்டையாக மாற்றும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவ்வாறு நிகழாவிட்டால், முட்டையின் மேல் துளையிட்டு பலகீனமாக்கி, தரமான ஒரு உயிரணுவைப் பிடித்து, முட்டையின் பலகீனப் பகுதியோடு உள்ளே புகுந்திடச் செய்வார்கள்.

பின்பு அவற்றை செயற்கை கருப்பைப் போன்ற இங்குப்பேட்டரில் (Incubator) வைத்து கருத்தரிக்கிறதா? செல்கள் பிரிகிறதா? சரியா வளர்கிறதா? என்று கண்காணிப்பார்கள். பலசெல்நிலைக்கு வந்து, கரு உயிர் ஆனா பிறகு கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும். பின்பு கரு உயிர் இங்கு பதியமாகும். அதை அல்ட்ரா சவுண்ட், ரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்து, பெண் கருத்தரித்து விட்டதை அறிவிப்பார்கள்.

(சோதனைக் குழாய் கருவாக்கம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில நாளில் அதைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்த தயாராக இருக்கும் போது அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக் கோளாறோ, அத்தியாவசியப் பயணச் சூழலோ ஏற்பட்டால் அதற்கும் மாற்று வழி இருக்கிறது. கருவாக்கம் செய்யப்பட்ட சினை முட்டையை அதனுள் இருக்கும் கரு உயிரோடு திரவ நைட்ரஜெனில் மைனஸ் 196 டிகிரி வெப்பத்தில் உறையவைத்து விடவேண்டும். பின்பு அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு 'கிரையோ பிரசர்வேஷன்' (Cryo Preservatin) என்று பெயர்).

பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும் கரு உயிரில் ஒன்று பதியமாகாமல் போனாலும், இன்னொன்று பதியமாக வேண்டுமென்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்டவை கருப்பைக்குள் செலுத்தப்படும். சில தருணங்களில் இரண்டுமே பதியமாகி, இரண்டு குழந்தைகள் வளரத் தொடங்கிவிடும்.

இதுதான் சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் செயலாக்க வழிமுறையாகும் என்று விளக்கி முடித்தார் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.
                     

6 comments:

Anonymous said...

good and excellent post

prabhadamu said...

ரொம்ப நல்ல தகவல் நண்பரே. தெரியாதவர்கலும் தெரிந்து கொள்ள முடிந்த அளவுக்கு விளக்கமாக கூறியதுக்கு மிக்க‌ நன்றி நண்பா.

push said...

I am 9 months married, but i am until don't pregnancy,so What i do now for pregnancy

push said...

Very important information to your post

Domain Registration said...

very useful information site

Domain Registration said...

hi, good post