Tuesday, March 9, 2010

முதன் முறையாக பெண் டைரக்டருக்கு ஆஸ்கார் விருது

சினிமா கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருது ஆஸ்கார் ஆகும். 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விருது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை 82-வது ஆஸ்கார் விருது நேற்று வழங்கப்பட்டது.

ஆஸ்கார் வரலாற்றில் முதன்முறையாக பெண் டைரக்டர் ஒருவருக்கு சிறந்த டைரக்ஷனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்து உள்ளது. ஈராக் போர் பற்றிய படமான 'தி ஹர்ட் லாக்கர்' படத்தை இயக்கிய கேதரைன் பிஜ்லோவ் ஆஸ்கார் விருதை பெற்று இருக்கிறார். தி ஹர்ட் லாக்கர் படம் 6 விருதுகளை தட்டிச் சென்றது.

சிறந்த மூலக்கதை, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்காகவும் இந்த படத்துக்கு விருதுகள் கிடைத்து உள்ளன.

9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'அவாதார்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த விசுவல் எபக்ட்ஸ் ஆகியவற்றுக்கு விருதுகள் கிடைத்தன.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான விருதை, ஜெப் பிரிட்ஜஸ் பெற்று இருக்கிறார். 'தி கிரேசி ஹார்ட்' என்ற படத்தில் நாட்டுப்புற பாடல்களை பாடும் பாடகராக நடித்து இருந்தார்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான விருது 45 வயதான சாண்ட்ரா புல்லாக் என்ற நடிகைக்கு கிடைத்தது. இவர் 'தி பிளைண்ட் சைடு' படத்தில் வளர்ப்பு தாயாக நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. இந்த படம் ஒரு உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது.

பெண்கள் தினத்தன்று ஆஸ்கர் விருதைப் பெற்று பெண்ணினத்திற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறார் கேதரைன் பிஜ்லோவ். வாழ்த்துக்கள்.   

No comments: