Saturday, February 6, 2010

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை இரவீந்திரன்
(இளங்கோ)
பிறப்பு – 12.101958    இறப்பு – 06.02.2010
சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரவீந்திரன் அவர்கள் 06.02.2010 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார் சிவசக்தியின் அன்புக் கணவரும், அக்ஷயன், தருணியன் (கொ/இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், கணபதிப்பிள்ளை வள்ளிநாயகி ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனும், ரஞ்சி, தேவகி, விஜேந்திரன், சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நமசிவாயம் காலஞ்சென்ற பரமேஸ்வரியின் அன்பு மருமகனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிச் சடங்கு பொரளையில் (கொழும்பு) அமைந்துள்ள ஜெயரத்தினம் மலர்ச்சாலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (14.02.2009) மதியம் 12 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

15, 3/2 சுவிசுத்தாராம வீதி,
கொழும்பு – 06
தொலைபேசி : 0094112365760

No comments: