Saturday, February 27, 2010

சுஜாதா

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைகாட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ.பி.ஜே அப்துல் கலாமோடு ஒரே வகுப்பில் படித்தவர்.

சுஜாதா பெங்களுர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்க பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கியக் காரணராக இவர் இருந்தார்.

இந்த எந்திரத்தை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு பாரத் எலெக்ட்ரானிக்கில் குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.

நாவல்கள்

 • பதவிக்காக
 • ஆதலினால் காதல் செய்வீர்
 • பிரிவோம் சந்திப்போம்
 • அனிதாவின் காதல்கள்
 • எப்போதும் பெண் 
 • என் இனிய இயந்திரா
 • மீண்டும் ஜீனோ
 • நிலா நிழல்
 • கரையெல்லாம் செண்பகப்பூ
 • யவனிகா
 • கொலையுதிர் காலம்
 • வசந்த் வசந்த்
 • ஆயிரத்தில் இருவர்
 • பிரியா
 • நைலான் கயிறு
 • ஒரு நடுப்பகல் மரணம்
 • மூன்று நிமிஷம் கணேஷ்
 • காயத்ரி
 • கணேஷ் x வஸந்த்
 • அப்ஸரா
 • மறுபடியும் கணேஷ்
 • வீபரீதக் கோட்பாடுகள்
 • அனிதா இளம் மனைவி
 • பாதிராஜ்யம்
 • 24 ரூபாய் தீவு
 • வசந்தகாலக் குற்றங்கள்
 • வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
 • கனவுத்தொழிற்சாலை
 • ரத்தம் ஒரே நிறம்
 • மேகத்தைத் துரத்தினவன்
 • நிர்வாண நகரம்
 • வைரம்
 • ஜன்னல் மலர்
 • மேற்கே ஒரு குற்றம்
 • உன்னைக் கண்ட நேரமெல்லாம்
 • நில்லுங்கள் ராஜாவே
 • எதையும் ஒருமுறை
 • செப்டம்பர் பலி
 • ஹாஸ்டல் தினங்கள்
 • ஒருத்தி நினைக்கையிலே
 • ஏறக்குறைய சொர்க்கம்
 • என்றாவது ஒரு நாள்
 • நில் கவனி தாக்கு
 • காந்தளூர் வசந்தகுமாரன் கதை
 • பெண் இயந்திரம்
 • சில்வியா"
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
 • காயத்ரி
 • கரையெல்லாம் செண்பகப்பூ
 • ப்ரியா
 • விக்ரம்
 • வானம் வசப்படும்
 • ஆனந்த தாண்டவம்

பணியாற்றிய திரைப்படங்கள்

 • ரோஜா
 • இந்தியன்
 • ஆய்த எழுத்து
 • அந்நியன்
 • பாய்ஸ்
 • முதல்வன்
 • விசில்
 • கன்னத்தில் முத்தமிட்டால்
 • சிவாஜி த பாஸ்
 • செல்லமே
உடல் நிலை மோசமானதால் பிப்ரவரி 27, 2008 அன்று மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
 
"Nobody dies; they live in memories and in the genes of their children”. How True ? இது சுஜாதாவின் வரிகள் அவர் நினைவுகளில் மட்டும் வாழவில்லை அவருடைய படைப்புகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவுநாள்.

4 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

பகிர்வுக்கு நன்றி.

உங்கள் இந்த பதிவை
இங்கேஇணைத்துள்ளேன்.

நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

ஸ்ரீராம். said...

இது எப்படி இருக்கு, ஜன்னல் மலர், பொய் முகங்கள் போன்ற படங்களும் சுஜாதா கதைதான். படத்துக்காகவே சுஜாதா எழுதி, பாலச்சந்தர் அதை சற்றே மாற்றி எடுத்த படம் நினைத்தாலே இனிக்கும்

jeba said...

சுஜாதா அவரது நினைவு நாளன்று இந்த பதிவு அளித்ததற்கு மிக்க நன்றி நண்பரே...

ஷங்கரின் எந்திரன் படமும் சுஜாதா அவர்களின் திரைக்கதை மற்றும் வசனத்துடன் தான் உருவாகி வருகிறது...ஷங்கர் அவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு சுஜாதா அவர்களுடையது....!

சுஜாதா இல்லையெனில் ஷங்கர் இல்லை....அவர் இல்லாமல் ஷங்கர் இயக்கும் எந்திரன் எப்படி வருகிறது என்று பார்க்க ஆவலா இருக்கிறது...

உண்மையில் இவர் நுற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவர்....---ஜெபா
visit my blog
http://jebamail.blogspot.com

オテモヤン said...

オナニー
逆援助
SEX
フェラチオ
ソープ
逆援助
出張ホスト
手コキ
おっぱい
フェラチオ
中出し
セックス
デリヘル
包茎
逆援
性欲