Monday, February 22, 2010

ஜார்ஜ் வாஷிங்டன்

ஜார்ஜ் வாஷிங்டன் (பெப்ரவரி 22, 1732 - டிசம்பர் 14, 1799) அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்கவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.

வாசிங்டன், டி. சி. (Washington, District of Columbia) ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியை ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்று நடத்தியதன்  நினைவாக இடப்பட்டது. ஜார்ஜ் வாசிங்டன் அவர்களே இந்நகருக்கான நிலத்தை தேர்வு செய்தார்.

இன்று அவரின் 278வது பிறந்தநாள் ஆகும்.


No comments: