Saturday, February 13, 2010

ரதன் கவிதைகள்



உதாரணங்களில் இருந்து
உருவாகிறது வாழ்க்கை
உதாரணங்களை நம்புகிறது.
தேடிப் போகிறது.
அல்லது சுட்டிக்காட்டுகிறது.
பெருமிதம் கொள்கிறது
அல்லது காறி உமிழ்கிறது.
சூரியனிலிருந்து வெப்பத்தையும்
கதிர்களையும் சந்திரனையும்
மழையிலிருந்து தன்மையையும்
துளிகளையும் கடலையும் மேகத்தையும்
இரவிலிருந்து இருளையும்
அச்சத்தையும் ஒளியையும்
மலரிலிருந்து மணத்தையும்
அழகையும் தேனிக்களையும்
சேர்ந்தும் சார்ந்தும்
இடைமறித்தும் தீர்வுகளுமாய்
உதாரணங்களைப் பெறுகிறது.
உதாரணங்களில் கழிகிறது
உதாரணமாகவும்.

No comments: