Tuesday, February 16, 2010

தாதாசாஹெப் பால்கே

தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke)(ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

அவருடைய நினைவாகதான் தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது. 1966 ஆம் ஆண்டிற்கான விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது.

இன்று அவரது 66 ஆம் ஆண்டு நினைவு நாள்.

No comments: