Thursday, February 11, 2010

ஒளி படைத்த கண்ணினாய்...

டிசனின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் அவர் வேலையில் மும்முரமாக இருந்தார். அப்படி இருக்கும்போது யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லியிருந்தார். சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டது. அவருடைய மனைவி வந்து பார்த்தாள். தொந்தரவு செய்யக்கூடாதே என சாப்பாட்டைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போய்விட்டாள்.


சிறிது நேரம் கழித்து அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கும் எடிசனைப் பற்றித் தெரியும். அவரைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். சாப்பாட்டுத் தட்டைக் கண்டார். சரிதான் சும்மா இருப்பதற்குப் பதிலாகச் சாப்பிட்டு வைப்போமே என்று சாப்பிட்டு விட்டார். சிறிது நேரம் கழிந்தது. எடிசனின் வேலை முடிந்து விட்டது. எச்சில் தட்டைப் பார்த்தவர் நண்பரைப் பார்த்து, "அடடா! கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? நான் சாப்பிட்டு முடித்து விட்டேனே!" என்றான் அந்த அறிஞன்.
 
இன்று அந்த அறிஞன் தாமஸ் ஆல்வா எடிசனின் 163 வது பிறந்தநாள்.

No comments: