Monday, February 1, 2010

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 கிராமி விருதுகள்


சிறந்த இசைக்கலைஞர்களுக்கான கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. விழாவில் இசைப்புயல் .ஆர்.ரகுமானுக்கு 2 கிராமி விருதுகள் வழங்கப்பட்டது. ஸ்லாம் டாக் மில்லினர் படத்தின் சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், சிறந்த பாடல் பிரிவில் 'ஜெய் ஹோ' பாடலுக்காகவும் அவருக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளது. ஸ்லாம் டாக் மில்லினர் படத்துக்காக 2 ஆஸ்கார் விருதுகள் வென்ற அவருக்கு மேலும் 2 உயரிய விருதுகள் கிடைத்துள்ளது.

*****************************

மைக்கேல் ஜாக்சானுக்கு வாழ்நாள் சாதனை விருது


இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மறைந்த பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. அவருடன் லியோனார்டு கோகென், லொரெட்டா லின் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்குவிழாவில் ஜாக்சனின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் அவருடைய குழந்தைகள் அவர் சார்பில் கலந்து கொண்டு விருதை பெற்றுக்கொண்டனர்.

மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு தன் 50 வயதில் போதை ஊசி போட்டுக்கொண்டதன் காரணமாக மரணம் அடைகிறார். அவர் தன் வாழ்நாளில் 13 கிராமி விருதுகள் பெற்றவர்.

விருதுப் பெற்ற ரகுமானுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

No comments: