Wednesday, January 6, 2010

இசைப்புயலுக்கு பிறந்தநாள்

தன்னடக்கம், உழைப்பு, அன்பு, இறையருள், இசையுலகில் புதுமை இவற்றுக்கு சொந்தக்காரரான இசைப்புயல் .ஆர்.ரகுமானுக்கு இன்று 43 வது பிறந்தநாள்.

2009 ஆம் ஆண்டின் சிறந்த இந்தியர் (Indian of the year), என பாராட்டப்பட்ட இசைப்புயல் . ஆர். ரகுமான் தமிழ், ஹிந்தி, மற்றும் மாநில மொழித் திரைப்படங்களுக்கு மட்டுமின்றி ஆங்கில திரைப்படங்களுக்கும் இசையமைத்து தேசிய விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, திரைப்பட துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இசை துறையின் உயரிய விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பவர். 81 வது, ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'என்று தன்னடக்கத்தோடு அவர் கூறியது அவரது புகழை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியது. இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை தேடித்தந்தஇவர் இந்தியாவின் 50வது சுதந்திர ஆண்டில் வந்தேமாதரம் பாடலை தனது இசை மூலம் அகில உலகிற்கும் எடுத்துச் சென்றவர்.

இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான .ஆர்.ரகுமானை உளறுவாயனும் வாழ்த்தி மகிழ்கிறது.

'வாழ்க நீ எம்மான் வையகம் உள்ளவரை'.


No comments: