Friday, January 29, 2010

ஓஷோ கதைகள்

விருப்பு - வெறுப்பு

ஹிட்லரின் காலத்தில் அவர் தன்னுடைய டி.லிட் பட்டத்துக்காக ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆறேழு வருடங்கள் சிரமப்பட்டு உழைத்து எழுதினார். கடைசியில் அவரை ஒரு நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள்.

கேள்வி: ஒரு யூதனாக இருந்துகொண்டு யூதர்களின் பாரம்பரியம் பற்றி ஓரம் சாராமல் உன்னால் எழுத முடியுமா? விருப்பு - வெறுப்பு இல்லாமல், சாட்சியாக இருப்பவனாக - வெறுமனே காண்பவனாக இருந்து கொண்டு நடுநிலையில் உன்னால் எழுத முடியுமா? யூதனாக இருந்து கொண்டு யூதர்களின் பாரம்பரியம் பற்றி எப்படி அப்படி எழுத முடியும்?

அவர் சொன்னார்: "அதை என்னால் நிருபிக்க முடியும். ஆனால் யூதனாக இல்லாமல் யூதர்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எந்த விருப்பு - வெறுப்புமின்றி உங்களால் எடைபோட முடியும் என்றால், நானும் எந்த விருப்பு - வெறுப்பும் இன்றி எழுத முடியும் என்பதை நிருபிக்க முடியும்".


சம்பள உயர்வு

முல்லா நஸ்ருதீன் ஒருநாள் தன் முதலாளியிடம் வந்தான். "என்னுடைய சம்பளத்தைக் கொஞ்சம் உயர்த்தித் தருகிறீர்களா?" என்று கேட்டான்.

முதலாளி அவனிடம், "முல்லா! உனக்கென்ன பைத்தியமா பிடித்து விட்டது? இரண்டு நாளைக்கு முன்னால்தானே உன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கிக் கொடுத்தேன்? இப்போ மறுபடியும் வந்து கேட்கிறாயே! ஒருவாரம்கூட ஆகவில்லை" என்றான்.

"அது சரிதான் ஆனால் என் மனைவிக்கு அந்தச் சம்பள உயர்வு பற்றித் தெரிந்து விட்டது. இப்போது என் பாகெட் மணிக்காக நீங்கள் கொஞ்சம் சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும்" என்றான்.

1 comment:

malar said...

இரண்டு கதைகளுமே கருத்து உள்ளது.