Monday, January 18, 2010

கொசுவின் காதல் கானம்...

"ஒய்ய்ய்ங்...ங்ஙூ...வீய்ய்ங்...''

கேட்டு இருக்கிறீர்களா? இதுதான் கொசுவின் காதல் கானமாம்.

வரும்போது சத்தம்போடாமல் வந்துவிட்டு போகும்போது பாடிக்கொண்டே போகிறதே இந்தக் கொசு. உணவு (ரத்தம்) உண்ட சந்தோஷத்திலா? என்றால் இல்லை. அது ஜோடியைத் தேடுகிறதாம், விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

இந்த கானத்தை கொசுக்கள் வாய் திறந்து பாடுவதில்லை. இறகுகளை சிறகடிப்பதன் மூலமே விதவிதமான 'டியூன்' அமைத்து காதலியை (காதலனை) தேடுகிறதாம். இது ஒரு பலவீனமானதில் இருந்து விதிவிலக்கான தேடல் அமைப்புதான்.

இதை கிரீன்விச் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்து உள்ளது. மேலும் நம்மைக் கடிக்கும் அனாபிலஸ் கொசு இனத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மரபணு மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

1 comment:

Om Santhosh said...

கொசுவின் காதல் கானம்...is very nice
மக்கள காதல் கானம் பண்ணும் போது கொசு பண்ணதா !