Saturday, January 30, 2010

சிட்னி ஷெல்டன்

சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon, பெப்ரவரி 11, 1917 - ஜனவரி 30 2007) ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகே இவரை நோக்கிப் பார்க்க வைத்தது. 

இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றவை: 'மாஸ்டர் ஒப் கேம்', 'ரேஜ் ஒப் ஏஞ்சல்ஸ்', 'தி அதர் சைட் ஓஃப் மிட் நைட்' ஆகியவையாகும். 

இவர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜெர்மன் யூத இனத்தையும் சேர்ந்தவர்கள். 

இரண்டாம் உலகப் போரின் போது இவர் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். 'Dooms day conspiracy' எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம். 'The Naked Face' எனும் முதலாவது நாவலை 1969 இல் எழுதினார். அடுத்த நாவல் 'The Other Side of Midnight' விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது.
இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம். திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

2005 இல் வெளி வந்த 'The other side of me', என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம்.
சிட்னி ஷெல்டன் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இவர் எழுதியுள்ள நாவல்கள்

  • The Naked Face (1970)
  • The Other Side of Midnight (1973)
  • A Stranger in the Mirror (1976)
  • Bloodline (1977)
  • Rage of Angels (1980)
  • Master of the Game (1982)
  • If Tomorrow Comes (1985)
  • Windmills of the Gods (1987)
  • The Sands of Time (1988)
  • Memories of Midnight (1990)
  • The Doomsday Conspiracy (1991)
  • The Stars Shine Down (1992)
  • Nothing Lasts Forever (1994)
  • Morning, Noon and Night (1995)
  • The Best Laid Plans (1997)
  • Tell Me Your Dreams (1998)
  • The Sky is Falling (2001)
  • Are You Afraid of the Dark? (2004)
  • Catoplus Terror
இன்று சிட்னி ஷெல்டனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

3 comments:

malar said...

இவர் நாவல் த்மிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா?

zorbathebuddha said...

"if tomorrow comes" என்ற நாவலை மறக்க முடியாது. அதிலும் அந்த ஏமாற்று ”செஸ்” விளையாட்டு........

C.Annamalai said...

•Catoplus Terror
தவிர அனைத்தையும் படித்துள்ளேன் .
முதலில் "stranger in a mirror "படித்தேன் பின்பு
அனைத்தும் வாங்கிவிட்டேன் ,சில ஒரிஜினல் புத்தகம்
சில பைரேட்டட் எடிசன் ."If tomorrow comes ல் செஸ் விளையாட்டு
மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்கும் பிளான் மிக அருமை"
அவர் இந்தியா வந்திருந்த போது தொலைகாட்சி பேட்டி அளித்தார்