Monday, January 11, 2010

ரதன் கவிதைகள்














ன்
கடவுளுக்கு
மூன்று கண்கள் இல்லை
நான்கு அல்லது
ஆறு கைகள் இல்லை
அரிவாள் - கத்தி போன்று
எவ்வித உலோகத்தாலான
ஆயுதங்களும் ஏந்தியிருக்கவில்லை
வெள்ளி தங்கம் பிளாட்டினத்திலாவது
எந்த ஆபரணமும் அணிந்திருக்கவில்லை.
அப்பிராணிகளான
பிராணிகள் மீதோ பறவைகள் மீதோ
அவன் பயணிப்பதில்லை.
அவனுக்கு
நடனமும் தெரியாது
அனந்த சயனமும் கிடையாது.
முள்கிரீடம் தரித்தோ
சிலுவைகளைச் சுமந்தபடியோ இல்லை
குறிப்பாக அவன்
எங்கும் நிறைந்திருக்கவில்லை.
மேலும் குறிப்பாக அவனுக்கு
தூதர்கள் இல்லவே இல்லை.
நான் அறிந்தவரையில்
அவன் என்னை அறிந்திருக்கவில்லை
ஆதலால்
என் கடவுளுக்கு
மூன்று கண்கள் இல்லை.

1 comment:

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது....உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...