Friday, January 8, 2010

இலங்கை தமிழ் அகதிகளுக்கு சென்னை பல்கலைக் கழகம் இலவச கல்வி


லங்கை தமிழ் அகதிகளின் இலவச கல்விக்கு சென்னை பல்கலைக் கழக பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக துணைவேந்தர் திருவாசகம் கூறினார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:-

சென்னை பல்கலைக்கழகம் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு இலவச கல்வி வழங்க உள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துஇருக்கிறார்கள். இந்த இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, மறுவாழ்வுத்துறை இயக்குனர் கலைவாணன், கவிஞர் கனிமொழி எம்.பி.ஆகியோருடன் 18-ந்தேதி ஆலோசனை நடத்தப்படும்.

அப்போது, இலங்கைக்கும் அங்கு தமிழர்கள் வாழும் முகாம்களுக்கும் செல்ல அனுமதி, மாணவர் சேர்க்கை, வகுப்புகள் நடத்துவது, புத்தகங்கள் வழங்குவது. ஆசிரியர் ஏற்பாடு, தேர்வு நடத்துவது குறித்து விவாதிக்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் படிப்புக்கு உதவுவதை சென்னை பல்கலைக்கழகம் தனது கடமையாக கருதுகிறது. இந்த இலவச கல்வி திட்டத்திற்காக 2010-1011 பல்கலைக்கழக பட்ஜெட்டில் ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

No comments: