Thursday, January 7, 2010

பத்திரிக்கைச் செய்தி

பொன்சேகாவுக்கு ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

லங்கையில் அதிபர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதில் ஆளும் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராஜபக்சேயும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை இதுவரை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்தது. இரு தரப்பினருமே இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மவுனம் காத்து வந்தது.

இதனிடையே தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தலைவர் ரா.சம்பந்தன், நேற்று கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை தங்களது கட்சி ஒரு மனதாக ஆதரிக்கும் என்று அறிவித்தார். இந்த முடிவுக்கு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments: