Thursday, December 3, 2009

ஸ்கைட்ரெக்ஸ் விருது

ஸ்கைட்ரெக்ஸ் (Skytrax) பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனமாகும். இது உலகின் விமான நிலையங்கள் வழங்கும் சிறந்தச் சேவைகளின் தர நிர்ணய நிறுவனமாகும். இந்நிறுவனம் வர்த்தக போக்குவரத்து விமான நிலையங்கள் வழங்கும்; விமான போக்கு வரத்து வசதிகள், விமான பணியாளர்களின் நிறைவான அனுகுமுறை, பயணித்தின் பொழுது வழங்கும் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பெறப்படும் பயணிகளின் மனநிறைவுத்தன்மை அடிப்படையில், பயணிகளிடம் இருந்து பெறப்படும் தரவுகள் ஊடாகவே கணிப்பிடுகின்றது. இவ்வாறு கணிப்பீடுகளூடாக பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த விமான சேவையை வழங்கும் விமான நிலயத்தின் ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் தேர்ந்தெடுக்கும் சிறந்த விமான நிலைத்திற்கு; உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதாக ஸ்கைட்ரெக்ஸ் விமான நிலைய விருது வழங்கப்பட்டு வருகின்றது.

No comments: