Wednesday, December 30, 2009

விஷ்ணுவர்தனுக்கு அஞ்சலி




வேண்டும்! மீண்டும் உன் ஒளிக்கீற்று...!

ந்திய திரையுலகின்
ராஜ நட்சத்திரங்களில் ஒன்று
இன்று ஒளிர மறந்துவிட்டது!.
கன்னடத் திரைவானில் மின்னிய ஒளியே !
விஷ்ணுவர்தனே !
அன்று தமிழ்த் திரையுலகம்
உன்னை தத்தெடுத்து
கொண்டாடியதை மறப்போமா?
உனது நடிப்பில் எழுந்த
'அலைகள்' எனும் திரைப்படம்
தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்.
ஸ்ரீதர் எனும் திரையுலக மாமேதையின்
உனக்கான படைப்பு அது.
எண்பதுகளில் தமிழ் மக்கள் முணுமுணுத்த பாடல்களில்
'பொன்னென்ன பூவென்ன கண்ணே...'
எனும் இசை வடிவம்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. உனக்காக தருவித்தது.
அதையும் தாண்டி
நடிப்புலக இமயம் நடிகர் திலகம் சிவாஜி,
சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோருடன்
கன்னடத்து சூப்பர் ஸ்டார் நீயும் இணைந்தது,
'விடுதலை' எனும் திரைப்படத்தில்
முரண்பாடுகளுள் சிக்கித் தவிக்கும்
கன்னட - தமிழ் திரையுலகின்
நட்புறவு பாலமாக திகழ்ந்தவன் நீ !
உன்னை இழந்து தவிக்கும்
உன் உறவுகளோடும்,
இந்திய திரையுலகோடும்
உளறுவாயனும் இணைந்து
மீண்டும் ஒரு முறை உனது ஒளிர்தலை வேண்டி நிற்கின்றது.

No comments: