Thursday, December 24, 2009

பெரியார் - எம்ஜிஆர் நினைவு நாள் இன்று

பெரியார் என அறியப்படும் . வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர். சுயமரியாதை, பகுத்தறிவுவாதம், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்து யூனஸ்கோ நிறுவனத்தால்

"புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி"

என்று பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தந்தை பெரியாரின் 36வது நினைவுநாள் இன்று.

********************************************

எம்ஜிஆர் என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24,1987) இலங்கையின் கண்டியில் பிறந்து பின்னர் தமிழ்நாட்டில் குடியேறிய இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும், விளங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திகழ்ந்தவர். இவரது வசீகரமான தோற்றத்தாலும், நடிப்பாலும், கொடையுள்ளத்தாலும் மக்களை கவர்ந்த இவர்

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

என்ற அவரது பாடலைப் போலவே மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று மக்கள் திலகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 22வது நினைவுநாள் இன்று.

இந்த இரு பெரும் மேதைகளுக்கும் எங்கள் அஞ்சலியை சமர்பிக்கிறோம்.

No comments: