Monday, December 14, 2009

அதிநவீன மொபைல்கள்

"செல் பாதி, சொல் மீதி'', "செல் இல்லாத மனிதன் செல்வாக்கு இல்லாதவன்''. இது செல்போனைப் பற்றிய புதுமொழிகள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை டெலிபோன்கள் வைத்திருப்பவர்கள் வசதியானவர்கள். இன்றோ செல் செல்லாத இடமே இல்லை. அந்த அளவு எல்லா இடங்களையும் செல்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

இதனால் செல்போன் நிறுவனங்களுக்குள் போட்டாபோட்டி. நாள்நோறும் விதவிதமான செல்போன்கள் நவீன வசதிகளுடன் அறிமுகமாகின்றன. அவற்றில் சில புதுமையான செல்போன்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

சுற்றினாலே சார்ஜ் ஆகும்!

செல்போன்களில் வசதிக் குறைவாகத் தோன்றுவது பேட்டரியின் சார்ஜ் பிரச்சினைதான். மனம்விரும்பிய வசதிகள் நிறைய இருப்பதால் அதிகமான நேரம் செல்போனில் செலவழிக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி சார்ஜ் தீர்ந்துபோகும். பிறகு சார்ஜ் போட வேண்டும். சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆப் ஆகிப்போனால் அந்த நேரத்தில் வரும் முக்கியமான அழைப்புகளையும் ஏற்க முடியாமல் சிரமப்பட நேரிடும்.

இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவும், எளிமையான முறையில் சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதுமை மொபைல். இதில் சார்ஜ் தீர்ந்துபோனால் அதில் உள்ள துளையில் விரலை நுழைத்து செல்போனை சில சுற்றுகள் சுற்றினால் போதும் தற்காலிகமாக பேசும் அளவுக்கு சார்ஜ் ஆகும். உங்கள் வேகத்துக்கு ஏற்றபடி கூடுதல் அளவு சார்ஜ×ம் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கமான முறையிலும் சார்ஜ் செய்ய முடியும். விரலை பயன்படுத்துவதை விரும்பாதவர்களுக்கு அதற்கென தனி குச்சி ஒன்று தரப்படும். அதில்வைத்து செல்போனை சுழற்றினாலும் சார்ஜ் ஆகும்.

வேகமாகப் பரவும் அதிநவீன மொபைல் இது. எண்களை அழுத்தாமலே, தொடுவதை உணர்ந்தே செயல்படுவதால் ஆறாம் அறிவுடைய மொபைல் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்ஸ்த் சென்ஸ் வசதியை நாம் பயன்படுத்த விரும்பினால் நமது உள்ளங்கையில் எண்கள் (படத்தில் உள்ளபடி) ஒளிவடிவில் விழும்படி செய்து கொள்ளலாம். பிறகு அந்த எண்களை தொடுவதன் மூலமே செல்போனை இயக்க முடியும். இந்த மாதிரி மொபைல்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

'பேஷன்' மொபைல்

புதுமை விரும்பிகளுக்கான மொபைல் இது. கடிகாரம், பிரேஸ்லெட் செல்போன்கள் போல வளையல் மொபைல் இது. மூன்று வளையங்களாக இருக்கும் மொபைலில் ஒவ்வொரு வளையமும் அனுப்பி, ஏற்பி, டயல் என ஒவ்வொரு பணியைச் செய்யும். வளையத்தின் உட்புறம் எளிதில் டயல் செய்யும் வகையில் எண்கள் அமைக்கப்பட்டிருப்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஸ்டைலை விரும்பும் வசதி படைத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது இந்த மொபைல்.

விரல் சார்ஜ் மொபைல், வளையல் மொபைல் இரண்டுக்கும் தற்போது வடிவமைப்பில் வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் பிரபல நிறுவனங்கள் இதை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆறறிவு மொபைல்

செல்போன்களில் வசதிக் குறைவாகத் தோன்றுவது பேட்டரியின் சார்ஜ் பிரச்சினைதான். மனம்விரும்பிய வசதிகள் நிறைய இருப்பதால் அதிகமான நேரம் செல்போனில் செலவழிக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி சார்ஜ் தீர்ந்துபோகும். பிறகு சார்ஜ் போட வேண்டும். சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆப் ஆகிப்போனால் அந்த நேரத்தில் வரும் முக்கியமான அழைப்புகளையும் ஏற்க முடியாமல் சிரமப்பட நேரிடும்.

இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவும், எளிமையான முறையில் சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதுமை மொபைல். இதில் சார்ஜ் தீர்ந்துபோனால் அதில் உள்ள துளையில் விரலை நுழைத்து செல்போனை சில சுற்றுகள் சுற்றினால் போதும் தற்காலிகமாக பேசும் அளவுக்கு சார்ஜ் ஆகும். உங்கள் வேகத்துக்கு ஏற்றபடி கூடுதல் அளவு சார்ஜ் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கமான முறையிலும் சார்ஜ் செய்ய முடியும். விரலை பயன்படுத்துவதை விரும்பாதவர்களுக்கு அதற்கென தனி குச்சி ஒன்று தரப்படும். அதில்வைத்து செல்போனை சுழற்றினாலும் சார்ஜ் ஆகும்.

No comments: