Saturday, December 12, 2009

ரஜினி பிறந்தநாள்


ரஜினி !
மூன்றெழுத்தில் மூடிக்கிடக்கும்
முகம் காட்டா மகத்துவம் !

பலரைத் தத்தெடுக்கும் திரையுலகம்
ஒரு சிலரைத்தான்
பிரசவிக்கும் !
இவன்
திரைத்தாயின்
வித்துகளில்
முத்து !

உலகம் வியக்கும் உன்னதங்கள்
அத்தனையும் பெற்றும்
மனிதம் மறவா தங்கமகன் !

அதிகாரம் இவனை
வாவென அழைத்தும்
'அணைக்க' மறுக்கும்
அதிசயப் பிறவி !

அரிதாரம் பூசும் இவனுக்கு
'அறம் பொருள் இன்பம்' என்பது
மூன்று முகம் !

பொருள் தேடும் உலகில்
அருள் தேடும் பாபா !

ஆறிலிருந்து அறுபது வரை
மயங்கிக் கிடக்கும்
அபூர்வ ராகம் !

ஆயிரம் உண்டு
அவனைச் சொல்ல
அதற்கு வேண்டும்
ஆயிரம் ஜென்மங்கள் !

ரஜினி...
பார்வைக்கு எளியன் !
பழகுவதற்குரியன் !
தேசப் பிரியன் !
மானுட நேயன் !
மொத்தத்தில்
'மனிதன் !'

குகன்

இன்று பிறந்தநாள் காணும் Super Star ரஜினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

No comments: