Thursday, December 10, 2009

இன்று உலக மனித உரிமைகள் நாள்

லக மனித உரிமைகள் நாள் 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. .நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

உலக மனித உரிமை நாளையொட்டி கலைஞர் அறிக்கை

மண்ணின் மைந்தர் அனைவர்க்கும் அறவழியில் மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன், வாழ உரிமை உண்டு; அதைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்த்திடும்நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ந் தேதி 'உலக மனித உரிமை நாள்' கடைபிடிக்கப்படுகிறது.

மனித உரிமைகளைக் காப்பதில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக சாதி, மத, இன, மொழி வேறுபாடு கருதாது; ஆண், பெண் எனும் பால் வேறுபாடின்றி நமது அரசியல் அமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைப் பெற்று சுதந்திரத்துடன், சமத்துவத்துடன், கண்ணியத்துடன் ஒவ்வொருவரும் வாழ உதவிடுவோம்;

"ஆதிக்க உணர்வோடு எளியோரை வலியோர் வதைப்பதைத் தடுப்போம்; மனித உரிமைகள் காப்போம் என இந்நாளில் உறுதியேற்போமாக!"

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments: