Wednesday, December 9, 2009

குண்டுதுளைக்காத கண்ணாடி


துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பயன்படுகிறது.

துப்பாக்கி ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் பாலிக்கார்பனேட் என்ற பிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒரு ஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும். பாலிக்கார்பனேட் என்பது ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும். துப்பாக்கியின் சக்திக்கு ஏற்ப கண்ணாடியின் தடிமன் வேறுபடும். அதிகப்பட்சமாக 50 மி.மீ தடிமன் கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.

பிஸ்பினால்-A(bisphenol-A), சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றை வினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள்.

மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தல் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்.

குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம்

துப்பாக்கி குண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல் விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும் பரவி குறையும், அதற்கு அடுத்துள்ள பாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும் விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டு துளைக்கும் சக்தி இழக்கும்.

கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும்.

வழக்கமான குண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால் இக்கண்ணாடிப்பொறுத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன்ப்பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம் நவீன வகையிலான லேசான எடைக்கொண்ட ஒருக்கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது. இக்கண்ணடியில் சிலிக்கவுடன் அலுமினியம் ஆக்சைடு, நைட்ரேட் ஆகியவை கலந்து இருக்கும், இதனால் அது குறைந்த எடையில் அதிக கடினமாக இருக்கும்.இக்கண்ணாடியை அலுமினியம் ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள்.

ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்ப்புறமாக இன்னும் தடிமனான இரும்பு தகடுகளும் பொறுத்தப்பட்டு இருக்கும், காரின் அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொறுத்தி இருப்பார்கள்.



No comments: